News April 10, 2024
அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கோரி மாநில பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து பேசிய பாஜக எம்எல்ஏ ராம்வீர் சிங் பிதுரி, சிறை நெறிமுறைகள் அவரை சிறையில் இருந்து ஆட்சி செய்ய அனுமதிக்காது. அதனால், அவர் உடனடியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். இல்லையெனில், சட்டம் தன் கடமையை செய்யும் என எச்சரித்தார்.
Similar News
News July 8, 2025
கொடூரத்தின் உச்சம்.. ரயிலில் பெண் கூட்டு பலாத்காரம்

நாள்தோறும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் செயல்கள் குலைநடுங்க வைக்கின்றன. ஹரியானாவில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் பெண்ணை கும்பலாக பலாத்காரம் செய்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடூரத்தை அரங்கேற்றிய பிறகு, கொடூரர்கள் அந்த பெண்ணை தண்டவாளத்தில் வீசியுள்ளனர். அப்போது, மற்றொரு ரயில் ஏறியதால் அந்த பெண்ணின் கால் துண்டாகியுள்ளது. இதுக்கெல்லாம் எப்போதுதான் தீர்வு கிடைக்கும்?
News July 8, 2025
90% மூளை இல்லாமலும் சாதாரண வாழ்க்கை… எப்படி?

பிரான்சில் 44 வயதான ஒருவர் குடும்பம், வேலை என சாதாரணமாக வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு திடீரென ஒரு நாள் தீராத கால் வலி ஏற்பட ஹாஸ்பிடலுக்கு சென்றுள்ளார். அவரது ஸ்கேன் ரிப்போர்ட்டில் மூளையின் 90% பாகத்தை காணவில்லை. இதனை ஹைட்ரோசெபலஸ் (Hydrocephalus) என்பார்கள். அதாவது, மூளைக்குள் சீராக இருக்க வேண்டிய தண்டுவட திரவம் (CSF) அதிகமாகச் சேர்ந்து, மூளை அமைப்புகளை அழுத்துவதால் இப்படியான நிலை ஏற்படுகிறது.
News July 8, 2025
பெண்களுக்கு அரசு வேலைகளில் 35% இட ஒதுக்கீடு!

அனைத்து அரசு துறை பணிகளிலும் பெண்களுக்கு 35% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என பிஹார் CM நிதிஷ் குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள அம்மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, அவர் இந்த அறிவிப்பை கொடுத்துள்ளார். மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க & அதற்கான பயிற்சியை கொடுக்க பிஹார் யூத் கமிஷன் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.