News March 27, 2024
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி 7 நாட்களாக சிறையில் இருக்கும் நிலையில், அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
Similar News
News April 22, 2025
போலீசுக்கு வார விடுமுறை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

2021-ல் போலீசுக்கு வார விடுமுறை வழங்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்தக் கோரிய வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வார விடுமுறை தொடர்பான அரசாணையை போலீஸ் உயரதிகாரிகள் பின்பற்றாதது ஏன்? காவலர்களுக்கு சங்கங்கள் இல்லாதது ஏன்? என அடுக்கடுக்காக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் டிஜிபி விரிவான பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
News April 22, 2025
ஐபிஎல் யுத்தத்திற்கு ரெடியாகும் LSG vs DC

ஐபிஎல் தொடரில் இன்றிரவு 7.30 மணிக்கு ரிஷப் பண்ட் தலைமையிலான LSG அணியும், அக்சர் படேலின் DC அணியும் மல்லுக்கட்ட தயாராகி வருகின்றன. இரு அணிகளும் 5 போட்டிகளில் வெற்றி பெற்று சம பலத்துடன் இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும். புள்ளிப் பட்டியலில் DC 2-ம் இடத்திலும் LSG 5-ம் இடத்திலும் உள்ளன. இரு அணிகளும் 6 முறை நேருக்குநேர் மோதி தலா 3 வெற்றிகளை பெற்றுள்ளன. இன்றைய ஆட்டத்தில் யார் ஜெயிப்பாங்க?
News April 22, 2025
பாமக யாருடன் கூட்டணி? – ராமதாஸ் புது கணக்கு!

பாஜகவுடனான கூட்டணியில் சேர ராமதாஸ் விரும்பவில்லை என்றும், தவெக உடன் இணைய திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 6 மாதங்கள் காத்திருந்து விஜய்க்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து முடிவு செய்யலாம் என அவர் திட்டமிட்டுள்ளாராம். அப்படி செல்லவில்லை என்றாலும், தவெகவை காட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்கலாம் என்பது ராமதாஸின் பிளான் என கூறப்படுகிறது.