News November 19, 2024
இயக்குனர் பாலாவுக்கு அருண்விஜய் நெகிழ்ச்சி பதிவு

பாலா, அருண்விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘வணங்கான்’ படத்தை அருண்விஜய் தனது குடும்பத்திற்கு போட்டு காட்டி இருக்கிறார். இதுகுறித்து X தளத்தில், ‘நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகன். ஒரு நடிகனாக “எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா” என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற ‘வணங்கான்’ படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்’ என்றார்.
Similar News
News April 7, 2026
மேற்குவங்கத்தில் வெற்றி யாருக்கு? புதிய கருத்துக்கணிப்பு

மேற்குவங்க தேர்தலுக்காக Matrize நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், மொத்தமுள்ள 294 தொகுதிகளில் ஆளுங்கட்சியான TMC 140-160 தொகுதிகளில் வெல்லும் எனவும் பாஜக 130-150 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. TMC-ஐ (43%) விட பாஜகவுக்கான (41%) வாக்கு சதவீதம் 2 புள்ளிகள் மட்டுமே குறைவாக உள்ளதால் இத்தேர்தலில் கடும் போட்டி நிலவும் என தெரியவந்துள்ளது.
News April 7, 2026
பெரம்பூரில் விஜய்யின் வேட்புமனு ஏற்பு

பெரம்பூரில் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. பெரம்பூர், திருச்சி கிழக்கில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் வயது, வழக்கு உள்ளிட்ட விவரங்களில் குளறுபடி இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அந்த தவறுகளை திருத்தம் செய்து மேலும் 2 பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்த நிலையில், அவரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
News April 7, 2026
ஆந்திராவின் தலைநகர் அமராவதி: அரசிதழ் வெளியீடு

ஆந்திராவின் தலைநகர் அமராவதியை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அரசிதழும் வெளியிட்டுள்ளது. இதனை அம்மாநில CM, DCM உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். முன்னதாக, ஆந்திரா பிரிக்கப்பட்டபோது தெலுங்கானாவின் தலைநகராக ஹைதராபாத் மாறியது. 2019-ல் YSR காங்., ஆட்சியின்போது ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் என அறிவித்தார். பின்னர், 2024-ல் TDP ஆட்சி அமைத்தவுடன் அமராவதியை தலைநகராக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


