News October 15, 2025
மீண்டும் ‘அருணாச்சலம்’ காம்போ?

ஆக்ஷன் படங்களிலேயே தொடர்ந்து நடிக்கும் ரஜினி, விரைவில் காமெடியிலும் அசத்துவார் போலும்! ‘ஜெயிலர் 2’ படத்திற்கு பிறகு, ரஜினிகாந்தை சுந்தர்.சி இயக்குவார் என்ற தகவல் கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. கமலுடன் இணைவதற்கு முன், இந்த படம் உருவாக இருக்கிறதாம். ஏற்கெனவே, இவர்களின் காம்போவில் வெளியான ‘அருணாச்சலம்’ படம் மாபெரும் வெற்றி அடைந்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த காம்போ வெல்லுமா?
Similar News
News October 15, 2025
வேட்பு மனு தாக்கல் செய்தார் தேஜஸ்வி யாதவ்!

பிஹார் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, தேஜஸ்வி யாதவ் தந்தை லாலு பிரசாத்துடன் வந்து ரகோபூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த 1995ம் ஆண்டு முதல் லாலு பிரசாத்தின் குடும்பம் தான் இந்த தொகுதியில் வெற்றி பெற்று வந்திருக்கிறது. இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ‘மகாபந்தன்’ கூட்டணியை அமைத்துள்ளன.
News October 15, 2025
₹35,400 சம்பளம்: 2,570 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,570 (மாறுதலுக்கு உட்பட்டது) ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: Diploma, B.E, B.Tech. வயது: 18- 33. ₹35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் நவம்பர் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News October 15, 2025
Foxconn முதலீடு சர்ச்சை: என்னதான் நடக்கிறது?

Foxconn நிறுவனம் TN-ல் ₹15,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக CM தெரிவித்திருந்தார். ஆனால், இதை புதிய முதலீடாக பார்க்கவில்லை என்று Foxconn கூறியது. இதனால் அரசு பொய் சொல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் விளக்கமளித்த அமைச்சர் TRB ராஜா, இந்த திட்டத்திற்கான பேச்சுவார்த்தை ஒரு வருடமாக நடந்து வருவதால், Foxconn இதை புதிய முதலீடாக கருதவில்லை என்றும், இது உறுதியான முதலீடு எனவும் தெரிவித்தார்.