News February 28, 2025
லேடி சூப்பர்ஸ்டாருக்கு வில்லனாகும் அருண் விஜய்?

அருண் விஜய், தற்போது ஹீரோவாக பிஸியாக இருக்க விதை போட்டதே ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவரின் வில்லன் கேரக்டர் தான். சின்ன கேப் விட்டு, அவரை மீண்டும் வில்லனாக்க முயற்சி நடைபெறுகிறதாம். இம்முறை, சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘முக்குத்தி அம்மன் 2’ படத்தில் வில்லனாக நடிக்க கேட்டு இருக்கிறார்கள். அவர் பெரிய சம்பளம் கேட்க, இன்னும் உறுதி ஆகவில்லை. நயனுக்கு அருண் விஜய் வில்லன்! காம்போ எப்படி?
Similar News
News February 28, 2025
அன்றைய அண்ணாவும்… இன்றைய அண்ணாவும்…

தவெகவினரிடையே பேசிய விஜய், 1967இல் அண்ணா ஆட்சியைப் பிடித்தது போல 2026இல் நாமும் பிடிப்போம் என்று பேசியிருந்தார். பேரறிஞர் அண்ணா திமுகவை தொடங்கிய ஆண்டு 1949. பதினெட்டு ஆண்டுகள் தீவிர அரசியலில் ஈடுபட்டு 1967ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தார். ஆனால், கட்சி தொடங்கி ஒரே ஆண்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் ’விஜய் அண்ணா’ அண்ணாதுரையுடன் ஒப்பிடலாமா என்று திமுகவினர் கேள்வி எழுப்புகின்றனர்.
News February 28, 2025
TNPSC தொழில்நுட்ப பணிகள் தேர்வு முடிவுகள் வெளியீடு

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் உதவி பொது மேலாளர், உதவி இயக்குநர், பர்சர் உள்ளிட்ட 20 பதவிகளில் 109 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் 125 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளைப் பார்க்க இங்கே <
News February 28, 2025
பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

பாஜகவின் அடுத்த தலைவர் மார்ச் 15க்குள் அறிவிக்கப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே 12 மாநிலங்களில் அக்கட்சியில் அமைப்பு ரீதியாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் 6 மாநிலத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தப்பின் தேசிய தலைவருக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய தலைவர் நட்டாவின் பதவிகாலம் கடந்த ஜூன் 2024ல் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.