News October 9, 2025
கலைஞர் IN, அம்பேத்கர் OUT? அரசின் அறிவிப்பால் சர்ச்சை

சாதிப் பெயர்களுடன் உள்ள ஊர்களின் பெயர்களை மாற்ற TN அரசு அரசாணை வெளியிட்ட விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது. காரணம், தற்போதுள்ள பெயர்களுக்கு மாற்றாக <<17953629>>அரசு பரிந்துரை செய்துள்ள<<>> தலைவர்களின் பட்டியலில் அம்பேத்கர், கொடிகாத்த குமரன், சுப்ரமணிய சிவா உள்ளிட்ட தலைவர்களின் பெயர்கள் இடம்பெறாமல் ‘கலைஞர்’ பெயர் இடம் பெற்றுள்ளது ஏன் என அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News October 9, 2025
நயனின் சினிமா வயது 22 ஆனது.. நெகிழ்ச்சி ❤️❤️

சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்ததை நயன்தாரா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். திரைப்படங்கள் தன் வாழ்க்கையின் காதலாக மாறும் என்று தெரியாமல், கேமரா முன்பு முதல்முறையாக நின்று 22 ஆண்டுகள் ஆகின்றன எனவும், ஒவ்வொரு ஃபிரேமும், ஒவ்வொரு ஷாட்டும், தன்னை வடிவமைத்து உருவாக்கியதாகவும் அவர் பூரிப்படைந்துள்ளார். நயன் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படத்தை கமெண்ட் பண்ணுங்க.
News October 9, 2025
காசா அமைதி திட்டத்தை வரவேற்கிறேன்: PM மோடி

அமைதி திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும், ஹமாஸும் கையெழுத்திட்ட நிலையில் PM மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் முயற்சியையும் பாராட்டிய அவர், இந்த ஒப்பந்தம் PM நெதன்யாகுவின் வலுவான தலைமைக்கு ஒரு பிரதிபலிப்பு என தெரிவித்துள்ளார். பணயக்கைதிகள் விடுவிப்பு மற்றும் காசா மக்களுக்கு கிடைக்கும் மனிதாபிமான உதவிகள், நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News October 9, 2025
உலகின் துயரத்தை போக்கவே ராமாயணம்: மோகன் பகவத்

உலகின் துயரத்தை போக்கவே வால்மீகி ராமாயணத்தை படைத்ததாக RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். பகவான் ராமர் எப்போதும் நம்முடன் இருந்தாலும், அவரை அனைவரது வீடுகளுக்கும், வாழ்க்கையிலும் கொண்டு சென்றது வால்மீகி தான் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த பாரம்பரியத்தை மனித குலம் பொறுப்புணர்வுடன் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.