News May 23, 2024
ஜுன் 2ஆவது வாரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அது வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். இதனால் கட்சி நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் உள்ள திமுக, கலைஞர் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக ஜுன் 2ஆவது வாரத்தில் நடத்த முடிவு செய்திருப்பதாகவும், திமுக பொதுக்குழு கூட்டத்தையும் அண்ணா பிறந்தநாள் விழாவுக்கு முன்பு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News March 10, 2026
இந்த கணக்குகளில் 0 பேலன்ஸ் இருந்தாலும் அபராதம் இல்லை!

PMJDY உள்பட 72 கோடி அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை தேவையில்லை என்று நிர்மலா சீதாராமன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த கணக்குகளைப் பராமரிக்காததற்கு அபராதம் விதிக்கப்படாது, மேலும் வைப்புத்தொகை, பணம் எடுப்பது மற்றும் ஏடிஎம் சேவைகளுக்கும் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது; வங்கிச் சேவைகளை எளிதாக அணுகும் வகையில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
News March 10, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 10, மாசி 26 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சப்தமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News March 10, 2026
விஜய்க்கு ரெண்டரை வருஷம் CM ஆஃபரை வீசும் பாஜக?

திமுக – காங்கிரஸ் உறுதியாகிவிட்ட நிலையில் தனித்து களம் காணும் மோடில் விஜய் இருக்கிறார். ஆனால் எப்படியாவது விஜய்யை NDA கூட்டணிக்குள் கொண்டுவர அமித் ஷா, பவன் கல்யாண் மூலம் பேசி வருகிறாராம். அதன்படி நடந்த பேச்சுவார்த்தையில் தான், கூட்டணிக்குள் வந்தால் நீங்க தான் ரெண்டரை வருஷம் CM என்ற ஆஃபரை பவன் கல்யாண் அளித்துள்ளாராம். ஆனால் அதற்கு தலையசைக்காத விஜய், பனையூரில் ஆலோசனையில் இறங்கியுள்ளாராம்.


