News June 18, 2024
அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையம்

அரசு சார்பில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். குழந்தையின்மை பிரச்னையை போக்க, ஆயிரக்கணக்கான தம்பதிகள் தனியார் மருத்துவமனைகளில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களை நாடி வருகின்றனர். இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளிலும் அந்த வசதி செய்துதரப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
விவாகரத்து பிரச்னையை நான் பார்த்துக்கிறேன்: விஜய்

முதல்முறையாக விவகாரத்து வழக்கு பற்றி மறைமுகமாக விஜய் பேசியுள்ளார். ஏற்கெனவே உள்ள நிறைய பிரச்னைகளில் சமீபத்தில் மேலும் ஒரு பிரச்னை வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு நீங்கள் போராடி வருத்தப்படுவதை பார்த்து நானும் வருந்துகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த பிரச்னையை நான் பார்த்துக் கொள்கிறேன்; நல்லதே நடக்கும் என்றும் தொண்டர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் விஜய் பேசினார்.
News March 7, 2026
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: விஜய்

பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ என்ற திட்டத்தை தங்கள் ஆட்சியில் நிறைவேற்றுவோம் என விஜய் அறிவித்துள்ளார். இதில், மோதிரத்துடன் டிரஸ், சோப் உள்ளிட்டவை அடங்கிய பெட்டகமும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும், மகளிர் பாதுகாப்புக்காக வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும், பள்ளிகள், ரேஷன் கடைகளில் இலவச நாப்கின் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அவர் அறிவித்துள்ளார்.
News March 7, 2026
மகளிர் வங்கி கணக்கில் ₹15,000.. அதிரடியாக அறிவித்தார்

மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் இன்று வெளியிட்டுள்ளார். பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க தாய்மார்களுக்கு ₹15,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும், அண்ணன் சீர் திட்டத்தில் திருமணத்தின்போது பெண்களுக்கு 1 சவரன் தங்கம், பட்டு சேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அனைத்து அரசு பஸ்களிலும் மகளிருக்கு இலவச பயண திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் விஜய் அறிவித்துள்ளார்.


