News August 26, 2025
வயிற்று தசைகளை வலுவாக்கும் அர்த்த நவாசனம்!

✦வயிற்றுத் தசைகளை வலுவாக்கவும், வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
➥தரையில் கால்களை நீட்டி, முதுகை நேராக இருக்கும்படி உட்காரவும்.
➥முதுகை சாய்த்து, கால்களின் முட்டியை மடக்கி, தலை & பாதங்களை ஒரே நேர்கோட்டில் இருக்கும்படி உட்காரவும்.
➥அடிவயிற்றின் தசைகளை இறுக்கி, மார்பை முடிந்தவரை மேல் நோக்கி உயர்த்தவும். இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை, இருந்துவிட்டு பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.
Similar News
News August 26, 2025
RCB அணிக்கு திரும்ப ரெடி : ABD சூசகம்

RCB அணியின் முன்னாள் லெஜண்டரி வீரர் ஏபி டிவில்லியர்ஸ். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், எதிர்காலத்தில் தன்னை RCB அணியின் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் பணிக்கு அணுகினால் அதனை ஏற்றுக்கொள்வேன் என தெரிவித்துள்ளார். தனது இதயம் எப்போதும் RCB அணியோடு இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இப்பேட்டியின் மூலம் வரும் IPL-ல் RCB அணியில் ABD ஏதாவதொரு பொறுப்பு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 26, 2025
காலை உணவு திட்டம் சூப்பரான சமூக முதலீடு: CM ஸ்டாலின்

மாணவர்களுக்கு கல்வி வழங்குவது மட்டுமில்ல, பசியையும் பள்ளிகள் போக்க வேண்டுமென CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாப்பூரில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை துவக்கிய பின் பேசிய அவர், இத்திட்டத்தை தானே நேரடியாக கண்காணித்து வருவதாகவும், இந்த விரிவாக்கம் மூலம் 3.06 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். இத்திட்டம் செலவு கிடையாது, சூப்பரான சமூக முதலீடு என பெருமிதத்துடன் கூறினார்.
News August 26, 2025
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

நேற்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹74,840-க்கும், கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹9,355-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களுக்கு மேலாக உயர்ந்து வந்த வெள்ளி விலை இன்று கிராமுக்கு ₹1 குறைந்து ₹130-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,30,000-க்கும் விற்கப்படுகிறது.