News October 5, 2025
விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்: டிடிவி

கரூர் கூட்ட நெரிசல் ஒரு விபத்துதான்; யார் மீதும் பழிபோட முடியாது என்று டிடிவி தெரிவித்துள்ளார். விஜய்யை கைது செய்ய கூட்டணி கட்சிகள் CM ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால், அவரை கைது செய்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும். இதனாலே இச்சம்பவத்தில் ஸ்டாலின் நிதானமாக செயல்படுகிறார். கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்; அது குற்றத்தை ஏற்பது ஆகாது என்றார்.
Similar News
News October 5, 2025
BREAKING: விஜய் முக்கிய உத்தரவு

கரூர் துயர சம்பவத்தையொட்டி கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய விஜய் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். மக்களுக்கு இடையூறாக எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிறகே, கட்சி நடவடிக்கைகளை தான் தொடர இருப்பதாகவும் விஜய் தெரிவித்துள்ளாராம். விரைவில் தவெக மா.செ.,-க்கள் கூட்டமும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News October 5, 2025
Pak-க்கு Handshake செய்யாமல் சென்ற மகளிர் அணி

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாக்., கேப்டன் ஃபாத்திமாவுக்கு இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கைகுலுக்காமல் சென்றுள்ளார். இதேபோல, Asia Cup-ல் PAK அணியினருக்கு இந்திய வீரர்கள் கைக்கொடுக்காமல் போனது பெரும் சர்ச்சையானது. இதற்கு விளையாட்டில் அரசியல் வேண்டாம் என்ற கருத்துகள் எழுந்தன. இந்நிலையில் மகளிர் அணியும் இப்படி செய்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
News October 5, 2025
நடிகர் அஜித் குமாருக்கு தமிழக அரசு பாராட்டு

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் அணி 3-வது இடம் பிடித்ததை அறிந்து மகிழ்ச்சியடைந்ததாக DCM உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் தமிழ்நாட்டை பெருமையடையச் செய்த அஜித்துக்கு வாழ்த்துகள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் ரேஸில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் லோகோவை பயன்படுத்தியதற்கு தமிழக அரசு சார்பில் நன்றி எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார்.