News September 30, 2025

கைதான TVK நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

image

கரூர் நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான இருவருக்கும் கரூர் அரசு ஹாஸ்பிடலில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இருவருக்கும் அக்.14 தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News September 30, 2025

CM சார், என்னை பழிவாங்குங்க, ஆனால்… விஜய் சவால்

image

கரூர் சம்பவம் பற்றி விளக்கம் அளித்த விஜய், CM ஸ்டாலினை சாடியுள்ளார். பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், தொண்டர்கள் மீது கைவைக்க என்றார். நான் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ தான் இருப்பேன் என்று சவால் விடுத்தார். கரூரில் மட்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது ஏன் என்று கேள்வி எழுப்பியதுடன், தன் அரசியல் பயணம் இனிதான் வலிமையோடு தொடரும் என உறுதிபடக் கூறியுள்ளார்.

News September 30, 2025

மனசு முழுக்க வலி… விஜய்யின் புதிய வீடியோ

image

கரூர் சம்பவத்தால், மனம் முழுக்க வலி… வலி மட்டுமே நிறைந்திருப்பதாக விஜய், இன்று வெளியிட்ட <<17876190>>வீடியோவில்<<>> தெரிவித்துள்ளார். சுற்றுப் பயணத்தில் மக்கள் தன்னை பார்க்க வருவதற்கு அன்பும், பாசமும் மட்டுமே காரணம் என்றும், அதற்கு தான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன் எனவும் அவர் கூறியுள்ளார். மக்களுக்கு பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கூடாது என்பது மனதில் எப்போதும் ஆழமாக பதிந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

News September 30, 2025

அனைத்து உண்மைகளும் வெளிவரும்: விஜய்

image

கரூர் விவகாரத்தில் தங்கள் மேல் எந்த தவறும் இல்லை என விஜய் விளக்கமளித்துள்ளார். மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும், அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற அவர், விரைவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும் எனக் கூறியுள்ளார். கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து மக்கள் பேசுவது, கடவுளே இறங்கி வந்து சாட்சி சொல்வது போல இருந்ததாகவும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!