News January 20, 2025
வங்கதேச முன்னாள் கேப்டனை கைது செய்ய ஆணை

செக் மோசடி வழக்கில் வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான ஷகிப் அல் ஹசனை கைது செய்ய டாக்கா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Ex PM ஹேக் ஹசீனா தலைமையிலான Awami League கட்சியில் எம்பியாக இருந்த ஷகிப் அல் ஹசன், வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு சொந்த நாட்டிற்குத் திரும்பவில்லை. இதனால், அவரது பாஸ்போர்ட்டை முடக்க வங்கதேச இடைக்கால அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 8, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (07.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 8, 2026
₹8,000 வரை ஊதிய உயர்வு.. அரசின் இன்ப அதிர்ச்சி

ரேஷன் கடை ஊழியர்களுக்கு TN அரசு ஊதிய உயர்வு அளித்ததன் மூலம், புதிய பணியாளர்களுக்கு ₹2,000, சீனியர்களுக்கு ₹8,000 வரை கூடுதல் ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக ஊதிய உத்தரவுக்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகி இருப்பதாக அனைத்து ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அகவிலைப்படியை 58% ஆக உயர்த்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News March 8, 2026
கண்களை பாதுகாக்க இதை செய்ய மறக்காதீர்

*அதிக நேரம் எதையும் உற்றுப் பார்க்காதீர்கள். கண்களை அடிக்கடி சிமிட்டுவது அவசியம். *குடல் சுத்தமாக இருந்தால் கண் பார்வையும் தெளிவாக இருக்கும். *இரு உள்ளங்கைகளால் இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய்த பிறகு, கண்களுக்கு ஓய்வளியுங்கள். *வெளிச்சம் குறைந்த இடங்களில் இப்படி பயிற்சி செய்வது நல்லது. SHARE IT


