News March 21, 2024
கெஜ்ரிவால் கைது: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். “தோல்வி பயம் காரணமாகவே, பாஜக அரசு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களை பாஜக அரசு இடைவிடாமல் துன்புறுத்தி வருகிறது. பாஜகவின் இத்தகைய செயல் பொதுமக்களின் கோபத்தை தூண்டுகிறது. இது ஜனநாயகத்தின் சீரழிவு மற்றும் அதிகார துஷ்பிரயோகம்” எனக் கூறியுள்ளார்.
Similar News
News October 23, 2025
மழையில் பாழாகும் நெல் மூட்டைகள்… யார் பொறுப்பு?

கொள்முதலுக்கு வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழாவதை கண்டு நெஞ்சம் பதறுகிறது. விவசாயிகள் கடன்பட்டு அறுவடை செய்ததை மழையில் இருந்து காப்பாற்ற ஒரு பாதுகாப்பான கிடங்கை கூட அரசால் கட்ட முடியாதா? ஒவ்வொரு கிடங்கிலும் 10,000 மூட்டைகள் பாதுகாப்பின்றி அழிகின்றனவாம். பசி போக்கும் உணவை பாதுகாக்க முடியவில்லை எனில், மாடல் ஆட்சிகளாலும், வல்லரசு பெருமையாலும் என்ன பயன் என மக்கள் கேட்கின்றனர்.
News October 23, 2025
CSK-வில் அஸ்வினுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர்

IPL-ல் இருந்து அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்க CSK திட்டமிட்டுள்ளது. குஜராத் அணியும் ₹3.2 கோடிக்கு சுந்தரை டிரேட் செய்ய ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரை சரியாக குஜராத்தால் பயன்படுத்த முடியவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சுந்தர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் CSK-வுக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 497
▶குறள்:
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.
▶பொருள்:ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.