News March 16, 2024

வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு

image

85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் மொத்தம் 82 லட்சம் வாக்காளர்கள் 85 வயதினை நிரம்பப் பெற்றவர்களாக உள்ளனர். 100 வயதைக் கடந்தவர்கள் 2.18 லட்சம் பேர் உள்ளனர். அதேநேரம் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி 18 வயது நிரம்பியிருந்தால் அவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 1, 2026

பெட்ரோல் விலை மிகப்பெரிய அளவில் உயர்கிறதா?

image

உலக நாடுகளின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் இடையே அமைந்துள்ள இந்த ஹார்முஸ் ஜலசந்தி, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையாகும். உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20% முதல் 30% சதவீதம் வரை இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. இதனால், பெட்ரோல் விலை மிகப்பெரிய அளவில் உயர வாய்ப்புள்ளது.

News March 1, 2026

அஜித்தை சீண்டிய தவெக பேச்சாளர்

image

அஜித்தை தவெக பேச்சாளர் ஃபெலிக்ஸ், மறைமுகமாக விமர்சித்தது சர்ச்சையாகியுள்ளது. திருவள்ளூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், உச்சம் தொட்ட பல நடிகர்கள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டதாகவும், கார் ரேஸுக்கு செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால், விஜய் தன்னை உச்சத்திற்கு அழைத்து சென்ற மக்களுக்கு நல்லது செய்திட, எஞ்சிய வாழ்நாள்களையும் திருப்பி தருகிறேன் என்று அரசியலுக்கு வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

News March 1, 2026

BREAKING: 200 பேர் மரணம்

image

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நேற்று மதியம் முதல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த கோரத் தாக்குதலில் பள்ளிக் குழந்தைகள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல, ஈரானின் உச்சத் தலைவர் கமேனி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவித்த நிலையில், அதற்கு ஈரான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!