News November 21, 2024
ARR டைவர்சுக்கும் மோகினி டைவர்சுக்கும் தொடர்பு இல்லை

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவருடைய கிட்டாரிஸ்ட் மோகினியும் ஒரே நேரத்தில் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளான நிலையில், ரஹ்மான் மனைவி சாய்ராவின் வழக்கறிஞர் வந்தனா விளக்கமளித்துள்ளார். “ரஹ்மான், சாய்ரா மட்டுமே எடுத்த முடிவு இது. வேறு எதனுடனும் தொடர்புபடுத்த வேண்டாம்” என்று அவர் கூறியுள்ளார்.
Similar News
News August 15, 2025
எரிபொருள் தற்சார்பு: டிரம்புக்கு மோடி மறைமுக பதிலடி

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பெறுவதைச் சுட்டிக்காட்டி இந்தியாவுக்கு 50% வரிவிதித்துள்ளது USA. இந்நிலையில், சுதந்திர தின விழாவில் பேசிய PM மோடி, பெட்ரோல், டீசல், கேஸ் போன்றவற்றை இறக்குமதி செய்வதை குறைக்க வேண்டும் என்றார். எரிபொருள் பயன்பாட்டில் இந்தியா தற்சார்பு அடைய வேண்டும் என்றும் சூளுரைத்தார். டாலர்கள், பவுண்டுகளை சார்ந்திருப்பது தற்சார்பு அல்ல என்று USA-க்கு மறைமுக பதிலடி கொடுத்துள்ளார்.
News August 15, 2025
தீபாவளி பரிசாக GSTயில் சீர்திருத்தம்: PM மோடி

GST சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டதாக PM மோடி தெரிவித்துள்ளார். 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட GST வரியால் இன்றளவும் பல வர்த்தக சிரமங்கள் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சுதந்திர தின விழாவில் பேசிய மோடி, GST சீர்திருத்தத்தால் இந்தாண்டு தீபாவளிக்கு நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது என்றார். இதன் மூலம் பொருள்களின் விலை குறையும் என்றும் உறுதியளித்துள்ளார்.
News August 15, 2025
டிகிரி போதும்.. 400 பணியிடங்கள்

பரோடா வங்கியில் (BOB) காலியாக உள்ள 417 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேனேஜர், ஆபிசர் அக்ரிகல்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 24 – 36. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம் & நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.26. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <