News August 27, 2024
30 நொடிகளில் உலகைச் சுற்றி

*சூடான்: அர்பாத் அணை உடைந்ததால் அருகில் இருந்த வீடுகள் நீருக்குள் மூழ்கி சுமார் 60 பேர் உயிரிழந்தனர். *உக்ரைன்: மின் கட்டமைப்புகள் மீது ரஷ்யா நடத்திய பெரும் தாக்குதலால் உக்ரைன் இருளில் மூழ்கியது. *இஸ்ரேல்: இஸ்ரேல் அரசு & ஹமாஸ் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் முடிந்தது. *சிங்கப்பூர்: உற்பத்திமுறை சார்ந்த துறைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சிங்கப்பூர் விருப்பம்.
Similar News
News December 24, 2025
டிசம்பர் 24: வரலாற்றில் இன்று

*1524 – வாஸ்கோடகாமா நினைவுநாள்.
*1973 – பெரியார் நினைவுநாள்.
*1978 – ரோபோ சங்கர் பிறந்தநாள்.
*1987 – எம்.ஜி.ஆர் நினைவுநாள்.
*1999 – இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 காத்மாண்டு – டெல்லி இடையே கடத்தப்பட்டு ஆப்கனின் கந்தகார் நகரில் தரையிறக்கப்பட்டது.
News December 24, 2025
கேமரா போனை பயன்படுத்த பெண்களுக்கு தடை

கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் போன்களை பெண்கள் பயன்படுத்தக்கூடாது என ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கீபேட் மொபைலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பெண்கள் போன் பயன்படுத்துவதால் குழந்தைகளின் பார்வைத்திறன் குறைவதால் இந்த முடிவு என கிராமத்தினர் கூறுகின்றனர். இந்த நடைமுறை ஜன.26 முதல் அமலுக்கு வருகிறது. உங்கள் கருத்து என்ன?
News December 24, 2025
டிகிரியை வைத்து ஒன்றும் செய்திட முடியாது: கமல்

திருச்சியில் PEFI & கமல் பண்பாட்டு மையம் விருது நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், விளையாட்டிலும், சினிமா தியேட்டரிலும் தான் சாதி ஒழிந்துள்ளது என்றார். விளையாட்டு வீரர்களும், இளைஞர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வெறும் டிகிரியை வைத்து ஒன்றும் செய்துவிட முடியாது என்ற கமல், அரசியல் விளையாட்டையும் ஆடிப் பார்க்க வேண்டும் என கூறினார்.


