News November 17, 2024
30 நொடிகளில் உலகைச் சுற்றி…

➤உக்ரைனுக்கு உதவியை தொடர்ந்து செய்ய உறுதி பூண்டு இருப்பதாக G7 நாடுகள் கூட்டாக மீண்டும் அறிவித்துள்ளன. ➤அமெரிக்க புதிய அரசின் வெள்ளை மாளிகை தலைமை செய்தித் தொடர்பாளராக கரோலின் லேவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ➤காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 43,799 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ➤40% மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவதாக IOM ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
Similar News
News August 28, 2025
ADMK – TVK கூட்டணி அமைந்தால் BJP வெளியேறுமா?

திமுகவை அரசியல் எதிரி என்றும், BJP-ஐ கொள்கை எதிரி என்றும் TVK கூறிவருகிறது. இதனிடையே, ADMK-வுடன் கூட்டணி வைப்பதிலும் TVK முனைப்பு காட்டி வருவதாக தகவல்கள் கசிகின்றன. ஒருவேளை ADMK-வுடன் TVK கூட்டணி வைத்தால், BJP வெளியேறுமா என்றால், நிச்சயம் இல்லை என்கிறார் அர்ஜுன் சம்பத். திமுகவை வீழ்த்த எல்லோரும் இணைந்து எதிர்க்கட்டும் எனக் கூறும் அவர், இந்து மக்கள் கட்சி விஜய்யை ஆதரிக்காது என்றார்.
News August 28, 2025
BREAKING: மாறியது தங்கம் விலை..

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 உயர்ந்து ₹75,240-க்கும், கிராமுக்கு ₹15 உயர்ந்து ₹9,405-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 20-ம் தேதி ₹73,440-க்கு விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே வாரத்தில் ₹1,800 அதிகரித்துள்ளது.
News August 28, 2025
₹10,000 கோடியை இழக்கும் விளம்பரத் துறை

ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மசோதாவால் முக்கிய ஸ்பான்சர்ஷிப் நிறுவனங்கள் உடனான ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து ரத்தாகி வருகின்றன. அத்துடன், இதுபோன்ற கேமிங் நிறுவன விளம்பரங்களில் நடித்துவந்த கங்குலி, தோனி, கில் உள்ளிட்டோரும், கோடிக்கணக்கில் தங்களது வருமானத்தை இழந்துள்ளனர். இந்நிலையில், கேமிங் தொடர்பான விளம்பரத் துறை ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ₹8,000 – ₹10,000 கோடியை இழக்கவுள்ளதாக கூறப்படுகிறது.