News August 5, 2024
30 நொடிகளில் உலகைச் சுற்றி

*இங்கிலாந்து: சவுத்போர்ட் நகரில் நடந்த அகதிகள் குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. *அமெரிக்கா: கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 4 லட்சம் மரங்கள் கருகின. *பாகிஸ்தான்: பஞ்சாப் மாகாணத்தில் போலியோ நோய் பரவல் அதிகரித்துள்ளது. *பெய்ரூட்: இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியதால் மத்தியக் கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
BIG BREAKING: திமுகவுடன் காங்.. முடிவை அறிவித்தார்

திமுக – காங்., தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஸ்டாலின், செல்வப்பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கூட்டணிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.. ஒப்பந்தத்தின்படி, திமுக கூட்டணியில் காங்.,க்கு 28 MLA சீட் + 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
குழந்தைகளுக்கு Diaper மாட்டும் பெற்றோர்களே உஷார்!

வீட்டில் இருக்கும்போது கூட குழந்தைகளுக்கு Diaper மாட்டும் பழக்கம் வந்துவிட்டது. அதில் அவர்கள் ஒருமுறை சிறுநீர் கழித்தால் கூட Diaper-ஐ மாற்ற வேண்டும். இல்லையென்றால் அதனால் ஏற்படும் நோய் தொற்றால், Urinary Infection-ல் தொடங்கி, சில சமயங்களில் சிறுநீரகம் வரை நோய் தொற்று பரவலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். முடிந்தளவிற்கு டயப்பர் வேண்டாம் எனவும் அறிவுறுத்துகின்றனர். SHARE.
News March 4, 2026
ஈரான் தாக்கு பிடித்தால் அமெரிக்காவுக்கு பெரும் சிக்கல்

உச்ச தலைவர் கமேனியின் மரணத்திற்கு பிறகு ஈரான் சரணடையாமல் அதன் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. இந்தப் போர் 4 வாரங்களில் முடிவடையும் என்று டிரம்ப் கூறினாலும், அது நீளும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். ஈரான் மீதான தாக்குதல்கள் இன்னும் 10 நாள்களுக்குத் தொடர்ந்தால், அமெரிக்காவின் முக்கியமான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் இருப்பு குறைந்து போகக்கூடும் என்று பென்டகன் எச்சரித்துள்ளது.


