News October 10, 2024
30 நொடிகளில் உலகைச் சுற்றி…

➤தென்கொரியாவுடனான எல்லையை நிரந்தரமாக மூடுவதாக வடகொரியா அறிவித்துள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. ➤ஜப்பான் நாடாளுமன்றத்தை பிரதமர் ஷிகெரு இஷிபா கலைத்து, தேர்தலை வரும் 27ஆம் தேதி நடத்த உத்தரவிட்டுள்ளார். ➤’டிஸ்கார்டு’ சமூக வலைத்தளத்திற்கு ரஷ்ய உச்ச நீதிமன்றம் நிரந்தர தடை விதித்துள்ளது. ➤’மில்டன்’ சூறாவளி புயல் காரணமாக அமெரிக்காவில் 1,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Similar News
News August 11, 2025
கனமழை வெளுக்கும்.. கவனமா இருங்க மக்களே!

சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தஞ்சை, தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை சென்னை, செ.பட்டு, திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனால், இரவில் வெளியே செல்வதை தவிருங்கள் மக்களே!
News August 11, 2025
தோனி வாக்குமூலம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

₹100 கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கில் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞரை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. IPL சூதாட்ட வழக்கு தொடர்பாக தனக்கு எதிராக அவதூறு கருத்து கூறியதாக IPS அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியாவுக்கு எதிராக 2014-ல் தோனி வழக்கு தொடர்ந்திருந்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், நீதிபதி CV கார்த்திகேயன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
News August 11, 2025
கர்நாடகா அமைச்சர் ராஜினாமா? இதுதான் காரணம்!

கர்நாடக அமைச்சர் ராஜண்ணா <<17370523>>ராஜினாமா<<>> செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸின் ‘வாக்குத்திருட்டு’ போராட்டம் பற்றி பேசிய அவர், மஹாதேவ்புராவில் நடந்த சம்பவம் மாநிலத்தில் காங்., ஆட்சியில் இருக்கும்போதே நடந்துள்ளது. நம் கண்முன்னே இந்த முறைகேடு நடந்துள்ளதற்கு கட்சி வெட்கப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார். அவரை பதவி விலகச் சொல்லி காங்., மேலிடத்தில் இருந்து அழுத்தம் வர, இந்தப் பேச்சு தான் காரணமாம்.