News April 23, 2025
தீவிரவாதிகளின் தளபதியை சுற்றிவளைத்த ராணுவம்

J&K-வில் எண்கவுண்டர் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. குல்காமில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட TRF தீவிரவாத அமைப்பின் தளபதி ஆஷிஃப் ஃபவுஜி உள்பட அனைத்து தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். ஆஷிஃப் நேரடியாக களத்தில் இறங்கி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News October 21, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், முதல் மாவட்டமாக கடலூரில் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். ஏற்கெனவே புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News October 21, 2025
வீட்டில் நல்லதே நடக்க இதை செய்யுங்க..

வீட்டில் நன்மை பெருகவும், தீமை ஒழியவும் படிகார கல் போதுமானது என்று நம்பப்படுகிறது. தொழில் வளர்ச்சி முதல் குழந்தைகளின் கல்வி வரை பலவற்றுக்கும், இந்த படிகார கற்களை வேத காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். புகைப்படங்களை SWIPE செய்து என்ன செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.
News October 21, 2025
சற்றுமுன்: அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் <<18066068>>பள்ளிக்கல்வித் துறை<<>> உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிக்கு மாணவர்கள் மழை கோட்டுகள், குடைகளை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க HM-களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மேற்கூரைகள் உறுதியாக இருக்கிறதா என ஆய்வு செய்யுமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.