News September 28, 2025

2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவம்

image

ஜம்மு & காஷ்மீரின் குப்வாரா பகுதியில் 2 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றவர்கள் தற்போது கொல்லப்பட்டுள்ளனர். மேலும், உளவுத்தகவல்கள் அடிப்படையில் எல்லையில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

Similar News

News September 28, 2025

லடாக் கலாச்சாரத்தின் மீது பாஜக தாக்குதல்: ராகுல்

image

லடாக் மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். லடாக்கின் கலாச்சாரமும், பாரம்பரியமும் RSS மற்றும் பாஜகவால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய மக்களுக்கு, 4 பேரைக் கொன்றும், சோனம் வாங்சுக்கை கைது செய்தும் மத்திய அரசு பதிலளித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News September 28, 2025

ஒரே நாளில் ரேஷன் கார்டு.. வழிமுறைகள் இதோ!

image

TN-ல் ரேஷன் கார்டுக்கு மனு கொடுத்து ஒரே நாளில் பெற முடியுமா? என்றால் முடியும். அதற்கான வழி இருக்கிறது. வாரந்தோறும் திங்கள்கிழமை கலெக்டர் ஆபிஸில் நடக்கும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தால் உடனடியாக பரிசீலனை செய்து கார்டுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் கூட பலருக்கு ஒரே நாளில் ரேஷன் கார்டு, பட்டா, ஓய்வூதிய சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

News September 28, 2025

Beauty Tips: ஆண்களே, இனி இப்படி Dress பண்ணுங்க!

image

ஆண்களே, உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா? அதற்கு உங்கள் பேச்சு, நடை, பாவனை மட்டும் போதாது. எந்த மாதிரியான ஆடைகளை நீங்கள் அணிகிறீர்கள் என்பதும் அவசியமாகிறது. மேலே இருக்கும் புகைப்படங்களை SWIPE செய்து, எந்த நிற சட்டைக்கு எந்த நிற பேண்ட் அணிந்தால் நன்றாக இருக்கும் என தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த ஆண்களுக்கும் இந்த செய்தியை SHARE செய்யுங்கள்

error: Content is protected !!