News October 29, 2025

கரூர் வழக்கை மேற்கோள் காட்டிய ஆம்ஸ்ட்ராங் மனைவி

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை CBI-க்கு மாற்றியதை எதிர்த்து, TN அரசு SC-ல் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், புதிய இடையீட்டு மனுவை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, SC-ல் தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை CBI விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். கரூர் துயர வழக்கு போன்று, CBI விசாரணையை கண்காணிக்க Retd நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

Similar News

News October 29, 2025

தவெகவுக்கு அழைப்பு விடுத்த திமுக

image

SIR நடவடிக்கை தொடர்பாக CM ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தவெகவின் CTR நிர்மல் குமார் கூறியிருந்தார். இந்நிலையில் திமுகவின் பூச்சி முருகன், பனையூருக்கு நேரடியாக சென்று N.ஆனந்தை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். வரும் நவ.2-ம் தேதி இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

News October 29, 2025

அருந்ததியாக மாறும் ஸ்ரீலீலா!

image

நடிகை அனுஷ்காவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற படம் ‘அருந்ததி’. 2009-ல் வெளியான இந்த படம் தென்னிந்திய மொழிகளில் சக்கைப்போடு போட்டது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து, இப்படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளிவந்துள்ளது. ரீமேக் படங்களின் கிங்கான மோகன் ராஜா இயக்கத்தில் இந்த படத்தில் ஸ்ரீலீலா அருந்ததியாக நடிக்கவுள்ளாராம். மிரட்டுவாரா ஸ்ரீலீலா?

News October 29, 2025

கூட்டணி நிலைப்பாடு: தவெக திட்டவட்டம்

image

தவெக-அதிமுக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டதாக EPS சொன்னது பற்றி தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், கூட்டணி தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பு நாங்கள் என்ன நிலைப்பாட்டில் இருந்தோமோ அதே நிலைப்பாட்டில்தான் தற்போதும் இருக்கிறோம் என் கூறியிருக்கிறார். இதன்மூலம், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை தவெக தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

error: Content is protected !!