News August 20, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: நெல்சன் மனைவிக்கு தொடர்பு?

image

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக இயக்குநர் நெல்சன் மனைவியிடம் விசாரணை நடைபெறுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ரவுடி சம்போ செந்தில் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனுடன் மோனிஷா பேசியதற்காக ஆதாரம் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதனால், அவருக்கு மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா? என்ற சந்தேகத்தின்பேரில், விசாரணை நடக்கிறது. நெல்சனிடமும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Similar News

News March 7, 2026

நேபாளத்தில் பிரதமராகும் இளம் ‘ராப்’ பாடகர் ஷா!

image

அண்டை நாடான நேபாளத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில் தேசிய சுதந்திர கட்சி(RSP) அமோக வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் நடந்த 165 தொகுதிகளில் 101 இடங்களை RSP கைப்பற்றியுள்ளது. இதனால், பிரபல ‘ராப்’ இசை பாடகரான பாலேந்திர ஷா(35) பிரதமர் நாற்காலியில் அமர உள்ளார். ஊழலற்ற நிர்வாகத்தை பேசி வரும் இவர், 2022 தேர்தலில் காத்மாண்டு மேயர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது கவனிக்கத்தக்கது.

News March 7, 2026

இதுபோல் அரசியல் செய்ய மாட்டோம்: சீமான்

image

தமிழகத்தில் பணவசதி படைத்தவன்தான் அரசியல் செய்ய முடியும்; வாக்குக்கு காசு கொடுக்காதவர்கள் வெல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். பணம் இருக்கிறவன்தான் அரசியல் செய்ய முடியும் என்றால் உழைக்கும் மக்களுக்கான அரசியலோ, அதிகாரமோ இந்த நிலத்தில் இருக்காது என்றார். பணத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய நாங்கள் வரவில்லை; மக்களுக்கு நல்லாட்சி தர வந்திருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

News March 7, 2026

மகளிர் உரிமைத்தொகை ₹25,000.. வங்கிக்கு வந்தது!

image

முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு மகளிர் உரிமைத்தொகை ₹25,000 வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கோவை, கொண்டம்பட்டியை சேர்ந்த மகேஸ்வரி 2025 ஜூலையில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தார். ஆனால், அவரது பெயர் ஏற்கெனவே KMUT-ல் இருந்துள்ளது. மகேஸ்வரியின் வங்கி கணக்கிற்கு பதிலாக UP-ஐ சேர்ந்த சாந்திதேவியின் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டிருந்தது. இதனால், சப்-கலெக்டர் உத்தரவால் ஒரே தவணையாக ₹25,000 வழங்கப்பட்டது.

error: Content is protected !!