News August 24, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: நெல்சனிடம் விசாரணை

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் அவரது குடும்ப நண்பர் என்பதால், அவரிடம் விசாரணை நடக்கிறது. ஏற்கெனவே, இவ்வழக்கு தொடர்பாக அவரது மனைவி மோனிஷாவிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், அவர் தனது நண்பர் மட்டுமே, கொலை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என நெல்சன் விளக்கமளித்துள்ளார்.

Similar News

News December 2, 2025

பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் இப்படியொரு நன்மையா?

image

★பேரீச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ரத்து குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ★இதில் வைட்டமின் பி6 உள்ளதால் இது குளிர்கால நோய்களை திறம்பட எதிர்த்துப் போராட உடலுக்கு உதவுமாம். ★மேலும், பேரீச்சம்பழத்தில் உள்ள கால்சியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள், எலும்புகளை வலுவாக்க முக்கியமானவையாக இருக்கும் எனவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.

News December 2, 2025

கோலியின் விலை உயர்ந்த சொத்துக்கள் (PHOTOS)

image

விராட் கோலி, உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக உள்ளார். இவரது சொத்து மதிப்பு ₹1,050 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஒப்பந்தங்கள், விளம்பரங்கள் மற்றும் புத்திசாலித்தனமான முதலீடுகளால் இவரது சொத்து மதிப்பு உயர்ந்து வருகிறது. இவரிடம் உள்ள மிகவும் விலையுயர்ந்த சொத்துக்கள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 2, 2025

குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு..

image

குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு டிச.8 முதல் டிச.18 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அழைப்பாணையை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், இதர விவரம் SMS, மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கலந்தாய்வை தவறவிட்டால் மறுவாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!