News October 10, 2025
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தமிழக அரசின் மனு நிராகரிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி, சென்னை ஐகோர்ட் கடந்த மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஐகோர்ட் உத்தரவு தொடரும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
Similar News
News December 8, 2025
சிவகங்கை: செய்தியாளரின் கண்கள் தானம்.!

திருப்புவனத்தில் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த கண்ணன் என்பவர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவால் குடும்பத்தினரும், நண்பர்களும், சக ஊழியர்களும் கடும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கண்ணனின் குடும்பத்தினர் மனிதாபிமானத்துடன் அவரது கண்களை தானமாக வழங்கினர். இதன்மூலம் இரண்டு பேருக்கு பார்வை கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
News December 8, 2025
FLASH: தங்கம் விலையில் மாற்றமில்லை

தங்கம் விலையில் இன்று(டிச.8) மாற்றிமின்றி 22 கேரட் 1 கிராம் ₹12,040-க்கும், சவரன் ₹96,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வார இறுதியில் கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது, சர்வதேச சந்தையில் நிலவும் மந்தநிலை(1 அவுன்ஸ் $4,210) காரணமாக இன்று விலையில் எவ்வித மாற்றமுமின்றி விற்பனையாகிறது. சுபமுகூர்த்த மாதம் என்பதால் இது நடுத்தர மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.
News December 8, 2025
NDA கூட்டணியில் சேர பாஜக மிரட்டலா? டிடிவி விளக்கம்

பாஜக அதிகாரத்தை பயன்படுத்தி மற்ற கட்சிகளை அழுத்துகிறது என்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார். கூட்டணிக்காக அதிகாரத்தை வைத்து பாஜக மிரட்டுகிறது என்று நினைக்கவில்லை என கூறிய அவர், நட்பு ரீதியாகவே பேசுவதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், அதிமுகவை ஒருங்கிணைக்க நினைக்கும் பாஜகவின் எண்ணத்தையும் குறை சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


