News December 15, 2024
தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய ஆதவ் அர்ஜுனா

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற ஆதவ் அர்ஜுனாவின் முழக்கம் விசிகவின் கொள்கை தான் என்றாலும், தேர்தல் கூட்டணிக்குள் சிக்கிய அக்கட்சியால், அதை உயர்த்திப் பிடிக்க முடியவில்லை. மேலும், கட்சிக்குள் நீண்டகாலம் இருப்பவர்களே அமைதியாக இருக்கும்போது, மன்னராட்சி என்றெல்லாம் இவர் நேரடியாக பேசுவது பலருக்கும் பிடிக்கவில்லை. இதனால், திருமாவால் அனைத்து தரப்பையும் சமாதானப்படுத்த முடியவில்லை.
Similar News
News March 10, 2026
வேலூர்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

வேலூரில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!
News March 10, 2026
பெட்ரோல், டீசல் விலை ரூ.22 உயர்வு… எங்கு தெரியுமா?

ஈரான் போர் காரணமாக இந்தியா உள்பட உலகில் பல நாடுகளிலும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு இப்போதே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலைகளையும் லிட்டருக்கு (இலங்கை கரன்சியில்) ரூ.22 உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் எரிபொருள் விலை உயராது என அரசு அறிவித்துள்ளது நிம்மதி அளித்தாலும், சர்வதேச நிலைமைகளால் சூழல் மாறலாம்.
News March 10, 2026
BIG NEWS: தமிழக தேர்தல் தேதி.. புதிய அப்டேட்

TN உள்பட 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதியை மார்ச் 15-ம் தேதி CEC அறிவிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது, TN-க்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.


