News April 2, 2025
‘அர்ஜுன் ரெட்டி’ நடிகையிடம் அத்துமீறிய இயக்குநர்

அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த ஷாலினி பாண்டே, 22 வயதில் தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தெலுங்கு பட ஷூட்டிங்கின்போது கேரவனில் உடை மாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், கதவை தட்டாமல் இயக்குநர் உள்ளே நுழைந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கோபத்தில் அந்த இயக்குநரை வெளியே போகச் சொல்லி, தான் கத்தியதாகவும் ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார். எந்த இயக்குநராக இருக்கும்?
Similar News
News November 18, 2025
சேமிப்புக்கான பழக்கங்கள்

இன்று நாம் செய்யும் சிறிய செயல்களும், முடிவுகளும் நாளை நமக்கு பெரிய பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை கொடுக்கும். குறிப்பாக பணத்தை கையாளுவதில் நிறைய கவனம் செலுத்த வேண்டும். செலவுகளை தாண்டி, சேமிப்பும், முதலீடும் நமக்கு பெரும் பயனளிக்கும். என்னென்ன சேமிப்பு பழக்கம் நமக்கு தேவை என்பதை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 18, 2025
குரூப் 2 பணியிடங்கள் 1,270-ஆக அதிகரிப்பு

குரூப் 2, 2ஏ காலிபணியிடங்களின் எண்ணிக்கையை 1,270-ஆக அதிகரித்து TNPSC அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வு குறித்து ஜூலை 15-ல் அறிவிப்பு வெளியான போது 645 காலிபணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கூடுதலாக 625 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த செப்.28-ம் தேதி நடந்த குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News November 18, 2025
BREAKING: நாளை மறுநாள் அனைத்து பள்ளிகளுக்கும்…

அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பை வழங்கியுள்ளது. அதன்படி, நவ.10-ல் திறனறி தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பெயர், இனிஷியல், படிக்கும் பள்ளி உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் இருப்பின், dgedsection@gmail.com இமெயில் மூலம் நவ.20-க்குள் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், தேர்வாகும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு அரசு மாதந்தோறும் தலா ₹1,500 வழங்க உள்ளது. SHARE IT.


