News June 17, 2024
‘விடாமுயற்சி’ அப்டேட் கொடுத்த அர்ஜுன்

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘விடாமுயற்சி’. சில வாரங்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனத் தகவல் வெளியானது. இந்நிலையில், இப்படத்தில் நடித்துவரும் அர்ஜுன், இம்மாத இறுதியில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது என்றும், இன்னும் 20% படப்பிடிப்பே பாக்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
Similar News
News March 14, 2026
சென்னை: UPI யூஸ் பண்றீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க!

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News March 14, 2026
BREAKING: விஜய்க்கு முதலிடம்.. புதிய கருத்துக்கணிப்பு

லயோலா(IPDS) கருத்துக்கணிப்பில், இளைஞர்களின் நம்.1 தேர்வாக விஜய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக, விசிக, நாதக, அதிமுக, பாஜக என்ற வரிசையில் பிற கட்சிகளின் வாக்குகளை விஜய் உடைப்பார் என கூறப்பட்டுள்ளது. அடுத்த முதல்வருக்கான ரேஸில் CM ஸ்டாலினை விஜய் நெருங்கிவிட்டதாகவும், நகர்ப்புறங்களில் திமுக கூட்டணிக்கு 24.77%, தவெகவுக்கு 23.44% மக்கள் ஆதரவு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News March 14, 2026
வங்கி கணக்கில் ₹25,000.. அரசு அறிவிப்பு FACTCHECK

PM Laptop Scheme 2026 திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் (அ) ₹25,000 வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. ‘CareerNotify18’ என்ற யூடியூப் சேனலில் வெளியான இந்த தகவல் பொய்யானது என மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. myscheme.gov.in. இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ தகவல்களை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


