News September 27, 2025
ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லையா?

ஆண்களில் இருபாலின சேர்க்கை (Bi-sexual) மற்றும் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ளோர் மீது அதிகமான பாலியல் கொடுமை இழைக்கப்படுவதாக அண்மை ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவ்வகை உறவுகளில் ஈடுபடுவோரில் பெண் தன்மைகளை வெளிப்படுத்தும் ஆண்கள் (உறவில் உட்படுபவராக இருப்பவர்கள்), வீடு, அலுவலகம் மற்றும் பொது இடங்களில் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுவது 61% அதிகமாக உள்ளதாம். ஆக, ஆண்களுக்கும் இப்போது பாதுகாப்பு இல்லை.
Similar News
News September 27, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 27, புரட்டாசி 11 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சஷ்டி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்▶பிறை: வளர்பிறை
News September 27, 2025
சீமான் வழக்கை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்

2018-ம் சென்னை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சைதாப்பேட்டை கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சீமான் தரப்பில் சென்னை HC-ல் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த போது, உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டதாக வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட கோர்ட் வழக்கை ரத்து செய்தது.
News September 27, 2025
சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி

சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகளையும் இலங்கை இழந்ததால் இந்தியாவுக்கு 3 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து சூர்யகுமாரும் சுப்மன் கில்லும் சூப்பர் ஓவரில் களமிறங்கினர். இதில் முதல் பந்திலேயே இந்தியாவின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 3 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். 2025 ஆசிய கோப்பை தொடரிலேயே சிறந்த ஆட்டம் இதுதான் என்று சொல்லும் வகையில் த்ரில்லிங்காக நடந்து முடிந்தது.