News December 29, 2024
PAN-40 போடுறீங்களா? அப்போ கவனமாக இருங்க!

நவம்பரில் மத்திய& மாநில மருந்து ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 111 மருந்துகள் தரமற்றவையாக இருப்பதை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கண்டறிந்துள்ளது. அதன் ஆய்வில், “பீகாரில் PAN-40, AUGMENTIN 625 DUO போன்ற நிறுவனங்களின் ‘பிராண்ட்’ பெயர்களை அங்கீகரிக்கப்படாத சில உற்பத்தியாளர்கள் பயன்படுத்தி போலியாக மருந்துகளை தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே, இவற்றை தரத்தை ஆராய்ந்து பயன்படுத்துங்கள்.
Similar News
News March 7, 2026
ஒரே மாவட்டத்தில் 4 எம்பிக்கள்.. தமிழக அரசியலில் விநோதம்!

TN அரசியல் வரலாற்றில் அபூர்வ நிகழ்வாக ஒரே மாவட்டத்திலிருந்து 4 பேர் பார்லிமெண்ட் செல்கின்றனர். திருச்சி லோக்சபா எம்பியாக துரை வைகோ உள்ள நிலையில், துவரங்குறிச்சியை சேர்ந்த கவிஞர் சல்மா ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இந்நிலையில், மேலும், திமுகவின் திருச்சி சிவா, காங்., சார்பில், கிறிஸ்டோபர் திலக்கும் ராஜ்யசபாவுக்கு செல்ல உள்ளனர். இதனால், திருச்சி மாவட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெறும் என பேசப்படுகிறது.
News March 7, 2026
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $82.45 (இந்திய மதிப்பில் ₹7,580) உயர்ந்து $5,171.92-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1.5 உயர்ந்து $84.54-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கம், இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 7, 2026
தேர்தல் செலவு விவகாரத்தில் அதிமுக மா.செ.,க்கள் அப்செட்?

தேர்தல் நெருங்கும் நிலையில், செலவு குறித்து EPS மெளனம் காப்பதால் மா.செ.,க்கள் அப்செட் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4-ம் தேதி கட்சி ஆபிஸை தொடர்ந்து தனது வீட்டிலும் மா.செ.,-க்கள் கூட்டத்தை EPS நடத்தினார். அப்போது, பூத் கமிட்டி, வேட்பாளர் தேர்வு பற்றி மட்டுமே EPS பேசினாராம். தேர்தல் செலவு குறித்து இதுவரை பேசாமல் இருப்பதால், வேட்பாளர் தேர்விலும் சுணக்கம் நிலவுவதாகவும் தகவல் கசிந்துள்ளது.


