News October 12, 2025
இரவு 10 மணிக்கு மேல் அந்தப் படம் பார்க்கிறீர்களா?

இரவில் ஹாரர் படங்கள் பார்ப்பதை சிலர் வழக்கமாக வைத்திருப்பர். பயத்துடன் அந்தப் படங்களை பார்த்தாலும், அந்த வழக்கத்தை கைவிட மாட்டார்கள். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், தூங்கச் செல்லும் முன்பு, அதாவது 10 மணிக்கு அத்தகைய படத்தைப் பார்ப்பது, மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்யும். இது தூக்கத்தை பாதிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. நீங்கள் இரவில் ஹாரர் படம் பார்ப்பவரா? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News October 13, 2025
விருதுகளில் கஜோலின் சாதனையை தகர்த்த ஆலியாபட்

‘ஜிக்ரா’ படத்துக்கு பிலிம் ஃபேர் விருது வாங்கியதன் மூலம் இந்த விருதை அதிக முறை (6) பெற்ற நடிகை என்ற பெருமையை ஆலியாபட் பெற்றுள்ளார். மறைந்த நடிகை நூதன் மற்றும் கஜோல் ஆகியோர் 5 பிலிம் ஃபேர் விருதுகளை வென்றுள்ளனர். ஆலியா பட் இதற்கு முன் உட்டா பஞ்சாப், ராஸி, கங்குபாய் கதியாவாடி, கல்லி பாய், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி உள்ளிட்ட படங்களுக்காக விருதுகளை பெற்றிருந்தார்.
News October 13, 2025
வரலாற்று வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா

மகளிர் உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 331 ரன்கள் இலக்கை எட்டிய நிலையில், மகளிர் ODI-ல் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுதான். 142 ரன்கள் அடித்து ஆஸி., கேப்டன் அலிசா ஹீலி வெற்றிக்கு வித்திட்டார். உலகக்கோப்பை லீக் சுற்றில் தோல்வியையே சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையை ஆஸி., தக்க வைத்துள்ளது.
News October 13, 2025
43 ஆண்டுகளாக அதிபராக இருப்பவர்… மீண்டும் போட்டி

கேமரூன் நாட்டின் அதிபர் பவுல் பியா 8-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? 92 வயதான அவர் 1982 முதல் அந்நாட்டின் அதிபராக இருக்கும் நிலையில் மீண்டும் களமிறங்குகிறார். ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்கு இரண்டே அதிபர்கள் தான் இருந்துள்ளனர். 1960-82 வரை அஹ்மத் அஹிட்ஜோ, அடுத்து பவுல் பியா. இன்று நடைபெறும் தேர்தலில் பியா வென்றால் மேலும் 7 ஆண்டுகளுக்கு அதிபராக இருப்பார்.