News September 30, 2025
Windows 10 யூஸ் பண்றீங்களா.. இத கவனியுங்க!

அக்டோபர் 14-ம் தேதியுடன், Windows 10 OS-க்கு வழங்கிய Backend Support-ஐ நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இனி பயனர்களுக்கு செக்யூரிட்டி அப்டேட், technical support போன்ற சேவைகள் நிறுத்தப்படும். ஜூலை 2015-ல் அறிமுகம் செய்யப்பட்ட Windows 10, 140 கோடி கணினிகளில் பொறுத்தப்பட்டுள்ளது. இது சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்பதால், Windows 11 OS-க்கு மாறும் படி வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Similar News
News March 21, 2026
LJK இணைந்ததால் கூட்டணிக்கு பலம்: ரங்கசாமி

ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் LJK-வை NDA கூட்டணியில் இணைப்பதற்கு புதுச்சேரி CM ரங்கசாமி மறுத்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், அவரே NDA கூட்டணியில் LJK இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். LJK இணைந்தால் கூட்டணிக்கு பலம் என்று மோடி, அமித்ஷா கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி, இக்கூட்டணியில் NR காங்., – 16, பாஜக – 10, அதிமுக, LJK கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
News March 21, 2026
₹18 கோடிக்கு ஏலம் போன ட்விட்டர் பதிவு!

மார்ச் 21, 2006. சாதாரணமாக ஜாக் என்பவர் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். ‘just setting up my twttr’ என அதிகாலை 2:20 மணிக்கு அவர் பதிவிட்டதுதான் உலகின் முதல் ட்விட்டர் பதிவாகும். இன்று X-ஆகியிருக்கும் ட்விட்டரின் Co-founder ஜாக். வரலாற்று சிறப்புமிக்க அவரின் இந்த பதிவு 2021-ம் ஆண்டு ₹18 கோடிக்கு ஏலம் போனது. அப்பணம் தொண்டு பணிக்காக அளிக்கப்பட்டது. நீங்க ட்விட்டரில் முதலில் என்ன பதிவிட்டீங்க?
News March 21, 2026
தொகுதிப் பட்டியலை வழங்கும் காங்கிரஸ்

சட்டப்பேரவை தேர்தலில் காங்., போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேசப் பட்டியலை திமுகவிடம் இன்று வழங்க இருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஏற்கெனவே வெற்றிபெற்ற தொகுதிகளையும், மதுரை வடக்கு உள்ளிட்ட புதிய தொகுதிகளையும் கேட்டுப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தென்மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை ஒதுக்க திமுகவிடம் காங்கிரஸ் வலியுறுத்தும் என தெரிகிறது.


