News October 8, 2025
Hand Dryer யூஸ் பண்றீங்களா.. உஷாரா இருங்க!

எங்கும் இருக்கும் இந்த Hand Dryers உடலுக்கு மிகவும் ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். Hand Dryer-கள் பாத்ரூமில் உள்ள காற்றை உள்ளிழுத்து சூடாக்கி, கைகளில் அடிக்கிறது. இதனால், பாத்ரூமில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் போன்றவை நேராக கைகளில் படருகின்றன. பல நோய்தொற்று பாதிப்புகளும் இதன் காரணமாக ஏற்படுவதாக எச்சரிக்கப்படுகிறது. எனவே, Tissue Paper-கள் பயன்படுத்துவதை வழக்கமாக்கிகோங்க. SHARE IT.
Similar News
News October 8, 2025
BREAKING: அதிரடியாக நீக்கினார் ஸ்டாலின்

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக இருந்த கார்த்திக்-ஐ அதிரடியாக நீக்கி அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நெல்லை கிழக்கு திமுக பொறுப்பாளராக இருந்த கிரகாம்பெல் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அரூர் தொகுதி பழனியப்பனிடம் இருந்து ஆ.மணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், திமுகவில் பல்வேறு ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
News October 8, 2025
108 தெரியும்; 104-னா என்ன தெரியுமா?

மக்களே, 108 என்ற எண்ணுக்கு இணையாக 104 என்ற எண்ணும் 2014-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டுவருகிறது. இந்த எண்ணிற்கு அழைத்தால் சாதாரண காய்ச்சலுக்கும் வைரஸ் காய்ச்சலுக்கும் என்ன வித்தியாசம் என்பதில் தொடங்கி ஆரோக்கியமான வாழ்க்கைக்குரிய டிப்ஸ், Mental Health கவுன்சிலிங் என அனைத்தையும் இலவசமாகப் பெறலாம். மேலும், அரசு ஹாஸ்பிடல் குறித்து புகார்களும் தெரிவிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 8, 2025
₹2,500-ஆக உயர்கிறதா பென்ஷன்?

EPFO-வின் EPS-95 கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ₹1,000-ல் இருந்து ₹2,500 ஆக உயர்வதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பணவீக்கத்தின் காரணமாக மாதாந்திர ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில்தான், வரும் 10 & 11-ம் தேதிகளில் மத்திய அறங்காவலர் குழுவில் இது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.