News October 18, 2025

பாத்ரூமுக்கு போனுடன் செல்பவரா நீங்கள்?

image

பாத்ரூமுக்கு போனுடன் போவது உங்கள் கட் (Gut) ஹெல்த்தை பாதிக்கும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். டாய்லெட்டில் நீண்டநேரம் அமர்ந்து கையில் போனை நோண்டிக் கொண்டிருப்பது குடலுக்கு அதிக அழுத்தத்தை தருவதால் மூலநோய் வரும் ஆபத்து 46% அதிகரிக்கிறதாம். ஆகவே, பாத்ரூமில் போன் பயன்படுத்துவதை குறையுங்கள். நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதுடன், தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள் என்று அறிவுறுத்துகின்றனர்.

Similar News

News October 18, 2025

விஜய்க்காக காத்திருக்கும் இபிஎஸ்: பெங்களூரு புகழேந்தி

image

அதிமுக என்னும் மாபெரும் இயக்கம் 55-வது ஆண்டில் அடியெடுத்து வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். விஜய்யிடம் இருந்து எப்போது அழைப்பு வரும் என இபிஎஸ் காத்துக்கொண்டு இருப்பதாக விமர்சித்தார். மேலும், தற்போது அவரின் நடவடிக்கையை பார்த்தால், பாஜகவை கழற்றிவிட்டு, விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர நினைக்கிறார் போல தெரிகிறது எனவும் தெரிவித்தார்.

News October 18, 2025

மூலிகை: ஆயுளை நீட்டிக்கும் அவரைக்காயின் குணங்கள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ★அவரைக்காயில் உள்ள இரும்புச்சத்து ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது ★அவரை விதைகளை வேக வைத்து சாப்பிட்டால், வாயு தொல்லை நீங்குவதோடு வயிற்று புண்ணையும் ஆற்றும் ★அவரைக்காயில் உள்ள கால்சியம் எலும்புகள் & பற்களுக்கு வலு சேர்க்கிறது ★நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை & கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்துகிறது.

News October 18, 2025

2035-ல் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்!

image

இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் (Space Station) கனவு வரும் 2035-ல் நனவாகும் என ISRO தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்த விண்வெளி நிலையத்திற்கான தொடக்க தொகுதிகள் (Modules) 2027-ல் விண்ணில் நிறுவப்படும் எனவும் கூறினார். மேலும், விண்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியா தன்னிறைவான இடத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இத்துடன், ககன்யான்- 3 திட்டமும் தயாராகி வருவதாக கூறினார்.

error: Content is protected !!