News August 20, 2025
உங்கள மட்டும் கொசு அதிகமா கடிக்குதா? இதான் காரணம்

ஒரு இடத்துல எவ்வளவு பேர் இருந்தாலும் உங்கள மட்டும் கொசு தேடிவந்து கடிக்கிதா? அதுக்கு சில காரணங்கள் இருக்கு. ▶உங்களுடைய Blood Group ’O’, ‘AB’-ஆ இருந்தா உங்கள கொசு அதிகம் கடிக்கும். ▶உடற்பயிற்சி செய்பவர்கள் அதிக கார்பன் டை ஆக்சைட் வெளியிடுறதுனால அவங்கள கொசுக்கள் தேடி வரும் ▶உடல் வெப்பம் ஒரு காரணமா இருக்கு. ▶டார்க் கலர் உடைகள அணியுறது, மது அருந்துறது இதெல்லாம் கொசுக்களோட ஃபேவரைட்ஸ். SHARE.
Similar News
News August 20, 2025
பொது அறிவு வினா- விடை பதில்கள்!

காலை 11:30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17461215>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி- தருமபுரி.
2. 15 ஆகஸ்ட், 1969.
3. கும்பகோணம்.
4. அஸ்ஸாம்
5. மன்சூர் அலி கான் பட்டோடி
News August 20, 2025
காதல்.. டீச்சரை பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவன்

மத்தியபிரதேசத்தில் தான் ஒருதலை காதலை வளர்த்துவந்த 26 வயது ஆசிரியையை மீது 18 வயது மாணவன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒருநாள் தன்னை பார்த்து கமெண்ட் அடித்ததால் மாணவர் மீது ஆசிரியை போலீசில் புகாரளித்துள்ளார். இதனால் கடுப்பான அம்மாணவன் டீச்சரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
News August 20, 2025
தனித்துவமான படம் காஞ்சனா 4: பாகுபலி நடிகை பேட்டி

பாகுபலி படத்தின் ‘மனோகரி’ பாடலில் வரும் நடிகை நோரா ஃபடேஹி, ‘காஞ்சனா 4’ மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இதுதொடர்பாக சமீபத்தில் பேசிய அவர், இப்படம் தனித்துவமான கதையம்சம் கொண்டதாக தெரிவித்துள்ளார். தமிழில் பேசுவதற்கு அதிகமாக சிரமப்பட்டதாகவும், படக்குழுவினர் தனது மொழி உச்சரிப்புக்கு உதவியதாகவும் கூறியுள்ளார். காஞ்சனா படத்தின் முந்தைய பாகங்கள் ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.