News March 3, 2025
ஆபீஸில் ஒரு குட்டி தூக்கம் போடுறீங்களா..?

மதிய நேரத்தில் பல ஊழியர்களும் ஆபீஸில் குட்டி தூக்கம் போடுவார்கள். ஆச்சர்யமாக, இது நல்ல விஷயம் தான் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தூங்காதவர்களை விட பெரும்பாலும் பிற்பகலில் தூங்குபவர்களின் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்குமாம். மேலும், அவர்களுக்கு படைப்பாற்றல் அதிகரிப்பது, செயல்திறன் மேம்படுவது போன்ற அலுவலகத்திற்கு தேவையான சில நல்ல விசயங்களும் நடக்கின்றன. உங்க ஆபீஸில் தூங்க விட்டுருவாங்களா..?
Similar News
News November 22, 2025
சீமானின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நெல்லை பணக்குடியில் இன்று சீமான் தலைமையில் நடக்கவிருந்த மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், போராட்டத்திற்காக பணக்குடி சென்ற நாதகவினரை தடுத்து நிறுத்தி போலீசார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே, தடையை மீறி தேனியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தியதுபோல், இன்றும் போராட்டம் நடக்கும் என நாதகவினர் கூறுகின்றனர்.
News November 22, 2025
திமுக மூத்த தலைவர் பழனியப்பன் காலமானார்

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், வெள்ளக்கிணறு பேரூராட்சி Ex தலைவருமான வெ.நா.பழனியப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். இவர், திமுகவில் பொதுக்குழு உறுப்பினர், தலைமைச் செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் அவைத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளிலிருந்துள்ளார். வெ.நா.பழனியப்பன் மறைவுக்கு Ex அமைச்சர் செந்தில் பாலாஜி, உள்ளிட்ட திமுக முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News November 22, 2025
மதுரை மீனாட்சியே இதைதான் விரும்புகிறார்: செல்லூர் ராஜு

EPS-தான் <<18337497>>மதுரை மெட்ரோ<<>> ரயிலை துவக்கி வைக்கவேண்டும் என மதுரை மீனாட்சியும், மதுரை மக்களும் விரும்புவதாக செல்லூர் ராஜு கூறியுள்ளார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்ற அவர், MGR காலத்தில் இருந்தே திமுக இரண்டு முறை ஆட்சியில் இருந்தது இல்லை என்றும் பேசியுள்ளார். மேலும், திமுக நினைத்திருந்தால் மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை சரியாக அனுப்பியிருக்கலாம், ஆனால் செய்யவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


