News April 16, 2025

உலகின் முதல் விந்தணு ரேஸ் பார்க்க ரெடியா?

image

கார், பைக் ரேஸ் பார்த்திருப்போம். இதென்ன புதுசா இருக்கேன்னுதான யோசிக்கிறீங்க. ஏப். 25-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது. மைக்ரோஸ்கோப்பில் 2 விந்தணு மாதிரிகளை வைத்து நடைபெறும் இந்த ரேஸ், நவீன கேமராவில் படம்பிடிக்கப்பட்டு லைவ் கமெண்ட்ரி செய்யப்படுமாம். ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சி.

Similar News

News November 20, 2025

உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற உலகின் சிறிய நாடு

image

கரீபிய தீவு நாடான குராசாவ் (Curacao), ‘2026 கால்பந்து உலகக் கோப்பை’க்கு தகுதிபெற்று வரலாறு படைத்துள்ளது. இதன் மக்கள்தொகை வெறும் 1.56 லட்சம் பேர் தான். இதன்மூலம் FIFA உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற உலகின் மிகச்சிறிய நாடானது. கடைசி தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜமைக்காவுடன் 0-0 என டிரா செய்தவுடன் வீரர்கள் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரில் மிதந்தனர். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா எப்போது தகுதிபெறும்?

News November 20, 2025

U-19 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு

image

அடுத்த ஆண்டு ஜிம்பாப்வே, நமிபியாவில் நடக்கவுள்ள U-19 ஆடவர் உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஜன.15-ம் தேதி தொடங்குகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. புள்ளிகள் அடிப்படையில் சூப்பர் 6 சுற்றுக்கு அணிகள் தகுதிபெறும்.

News November 20, 2025

INDIA கூட்டணி முடிவுக்கு வருகிறதா?

image

பிஹார் தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக காங்கிரஸ் தலைமை சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரக்கூடிய தேர்தல்களில் வெற்றி வாய்ப்புள்ள மாநிலங்களில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாகவும், இதர மாநிலங்களில் தேவைக்கு ஏற்ப தொகுதி பங்கீட்டை உறுதி செய்து, கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் INDIA கூட்டணி முடிவுக்கு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!