News April 10, 2025
ஒலிம்பிக் கிரிக்கெட் பார்க்க ரெடியா?

அமெரிக்காவின் லாஸ்-ஏஞ்சலஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டிகளும் விளையாடப்படவுள்ளன. டி20 ஃபார்மேட்டில் நடைபெறவிருக்கும் இப்போட்டிகளில், 6 அணிகள் பங்கேற்கும் என்று ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. எந்த 6 அணிகள் விளையாடவுள்ளன, எங்கு போட்டிகள் நடைபெறவுள்ளன போன்றவை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 18, 2025
பிரபல தொழிலதிபர் சுப்பையா வி ஷெட்டி காலமானார்

பிரபல தொழிலதிபரான சுப்பையா வி ஷெட்டி (92) மாரடைப்பால் காலமானார். கர்நாடகாவை சேர்ந்த இவர் மும்பையில் உள்ள ராமகிருஷ்ணா ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், உடுப்பி ஹோட்டல்கள் தொடங்கி ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியதோடு பல லட்சம் பேருக்கு கல்வி உதவியை செய்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏழைப் பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்துள்ளார். #RIP
News April 18, 2025
ஸ்டெய்னின் ‘300’ கமெண்ட்ஸ்.. கலாய்த்த MI!

IPL தொடரில் SRH அணிதான் முதலில் 300 ரன்களை விளாசும் என தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆனால், உண்மை என்னவோ வேறு மாதிரியாக உள்ளது. MI vs SRH அணிகளின் மேட்ச்சுக்கு முன்னர், டேல் ஸ்டெய்ன், SRH இந்த போட்டியில் 300 ரன்களை விளாசும் என பதிவிட்டார். மேட்ச்சுக்கு பிறகு, MI வெளியிட்டுள்ள பதிவில், ‘டேல் ஸ்டெய்ன் சொன்னது போல 328 ரன்கள் எடுத்தது (இரு அணிகளின் ரன்களையும் சேர்த்து) என கலாய்த்துள்ளது.
News April 18, 2025
இயேசு கிறிஸ்துவின் ‘4’ சிறந்த போதனைகள்

தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு *சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள் *தூய இதயத்தோடு இருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் *உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுக்கொடு.