News April 12, 2025

வானில் தோன்றும் அற்புதம்.. பிங்க் மூன் பார்க்க ரெடியா..!

image

ஏப்ரலில் வரும் முழு நிலவு ‘பிங்க் மூன்’ என அழைக்கப்படும். கிழக்கு வட அமெரிக்காவில் வசந்த காலத்தின் ஆரம்ப கட்டத்தில் Moss pink என்ற பூ பூக்கும். அதே காலக்கட்டத்தில் இந்த நிலவு தோன்றுவதால் ‘பிங்க் மூன்’ எனப்படுகிறது. உண்மையில் இது பிங்க் நிறத்தில் இருக்காது. வழக்கமான நிறத்திலேயே இருக்கும். அமெரிக்காவில் இன்றிரவு தோன்றும் பிங்க் மூன், இந்தியாவில் நாளை அதிகாலை 5 மணிக்கே தெரியும். மிஸ் பண்ணிடாதீங்க!

Similar News

News December 21, 2025

காஞ்சி: வேன் மோதி வாலிபர் பலி!

image

உத்திரமேரூர் அருகே குப்பையநல்லூரைச் சேர்ந்த அமல்ராஜ் (35), நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தனியார் பள்ளி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. பட்டஞ்சேரி பகுதியில் நடந்த இவ்விபத்தில் காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 21, 2025

SMS மூலம் Voter List செக் பண்ணலாம்.. Must Share

image

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை SMS மூலமும் செக் பண்ணலாம். ECI உங்களின் EPIC எண்ணை உள்ளிட்டு ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்புங்கள். அடுத்த சில விநாடிகளில் உங்கள் பெயர், சீரியல் எண், பாகம் எண், சட்டப்பேரவை தொகுதி, மாவட்டம் & மாநிலம் ஆகிய விவரங்கள் கிடைக்கும். பதில் கிடைக்கவில்லையென்றால் BLO & <<18615708>>ஆன்லைனில்<<>> மீண்டும் அப்ளை செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க.

News December 21, 2025

காலை அலாரம் அடிச்ச அப்புறம் தான் எழுந்திருக்குறீங்களா?

image

பலரும் காலை அலாரம் அடித்த பிறகே, எழுந்து வேக வேகமாக கிளம்புவோம். ஆனால், அந்த காலை அலாரம் இதயப்பிரச்னை இருப்பவர்களுக்கு ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். திடீரென அதிக சத்தம் கேட்டு எழுந்தால், Blood Pressure அதிகரிக்கும். இது Cardiovascular அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி, இதய பிரச்னைகள் அதிகரிக்குமாம். இதனை, Morning Blood Pressure Surge என்கின்றனர். மெல்லிய இசையை அலாரமாக வைக்கலாம்.

error: Content is protected !!