News October 25, 2024

மலையேற நீங்க ரெடியா?

image

தமிழ்நாட்டில் சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 40 மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய மலையேற்ற திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த <>TREK<<>> இணையதளத்தில் முன்பதிவு செய்து நுழைவுச் சீட்டை பெறலாம். வழிகாட்டிகளாக முறையான சிறப்பு பயிற்சிப் பெற்ற பழங்குடி & மலையோர கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் 300 பேர் இந்தப் பயணத்தின்போது உடன் பயணிப்பர். அப்புறம் என்ன இப்பவே மலையேற பிளான் போடுங்க!

Similar News

News November 18, 2025

குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி?

image

➤அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் ➤அவர்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேளுங்கள் ➤அவர்களின் சின்ன சின்ன முயற்சிகளையும் பாராட்டுங்கள் ➤குழந்தை முன் வீட்டில் சண்டையிடுவதை தவிருங்கள் ➤அவர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள் ➤சின்ன சின்ன முடிவுகளை அவர்களே எடுக்கட்டும். அவர்களுடைய Decision making திறன் வளரும். அனைத்து பெற்றோருக்கும் SHARE THIS.

News November 18, 2025

சேமிப்புக்கான பழக்கங்கள்

image

இன்று நாம் செய்யும் சிறிய செயல்களும், முடிவுகளும் நாளை நமக்கு பெரிய பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை கொடுக்கும். குறிப்பாக பணத்தை கையாளுவதில் நிறைய கவனம் செலுத்த வேண்டும். செலவுகளை தாண்டி, சேமிப்பும், முதலீடும் நமக்கு பெரும் பயனளிக்கும். என்னென்ன சேமிப்பு பழக்கம் நமக்கு தேவை என்பதை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 18, 2025

குரூப் 2 பணியிடங்கள் 1,270-ஆக அதிகரிப்பு

image

குரூப் 2, 2ஏ காலிபணியிடங்களின் எண்ணிக்கையை 1,270-ஆக அதிகரித்து TNPSC அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வு குறித்து ஜூலை 15-ல் அறிவிப்பு வெளியான போது 645 காலிபணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கூடுதலாக 625 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த செப்.28-ம் தேதி நடந்த குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!