News April 25, 2025
ஆக்ஷன் விருந்துக்கு ரெடியா மக்களே?

‘மிஷன்: இம்பாசிபிள் 8’ படம் இந்தியாவில் வரும் மே 17-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் மே 23-ம் தேதி ரிலீசாகும் நிலையில், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இங்கு ரிலீசாகிறது. 7-ம் பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி தான் இந்த பாகத்தையும் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Similar News
News April 26, 2025
ஏப்ரல் 26: வரலாற்றில் இன்று

▶ 1897 – தமிழ்தாய் வாழ்த்து பாடல் கொடுத்த பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் நினைவு நாள். ▶ 1970 – நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாள். ▶ 1973 – நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி பிறந்த நாள். ▶ 1989 – வங்கதேசத்தில் சூறாவளிக் காற்றால் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு. ▶ 1994 – ஜப்பானில் சீன விமானம் விபத்துக்குள்ளானதில் 264 பேர் உயிரிழப்பு.
News April 26, 2025
CSK செய்த மோசமான சாதனை..!

ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்த CSK-க்கு இந்த ஆண்டு சோதனை காலம்தான். சேப்பாக்கம் மைதானத்திலேயே மோசமான சாதனையை பதிவு செய்திருக்கிறது அந்த அணி. ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே சேப்பாக்கத்தில் தொடர்ந்து 4 போட்டிகளில் CSK தோற்றதில்லை. ஆனால், இந்த ஆண்டு RCB, DC, KKR, SRH என 4 அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் என்னெல்லாம் பார்க்கப் போறோமோ?
News April 26, 2025
டைனோசர் காலத்தில் வாழ்ந்த உயிரினம் கண்டுபிடிப்பு..!

பிரேசில் நாட்டில் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எறும்பின் புதைபடிமத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Hell Ant எனப்படும் இந்த வகை எறும்பு, ஹைடோமைர்மெசினே துணைக் குடும்பத்தைச் சேர்ந்ததாம். சுண்ணாம்பு கல்லில் இருந்து இந்த புதைபடிமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், எறும்புகளின் பரிணாம வளர்ச்சியை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.