News March 19, 2025
பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைக்கிறீங்களா… எச்சரிக்கை!

செல்போன் வெடித்து ஒருவருக்கு ஆணுறுப்பே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ம.பி.,யில் மார்க்கெட் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்த இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன் திடீரென வெடித்தது. இதில் அவரின் ஆணுறுப்பு சேதம் அடைந்ததுடன், கீழே விழுந்ததால் தலையிலும் காயமடைந்தார். செகன்ட் ஹேண்ட் போனை இரவு முழுவதும் சார்ஜ் போட்டதே இதற்கு காரணம் என்கின்றனர். ஓவர் சார்ஜ் போடாதீங்க BROTHERS!
Similar News
News March 20, 2025
ஐபிஎல்லில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி

2008-2024 வரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை சாம்பியன் கோப்பை வென்ற அணி எது எனப் பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த 2 அணிகளுக்கும் அடுத்து அதிகபட்சமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்த முறை சாம்பியன் யார்? உங்கள் கருத்து?
News March 20, 2025
வாடிவாசலின் பணிகள் தொடக்கம்.. செம அப்டேட்

வெற்றிமாறன் மற்றும் சூர்யா ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்க்கும் படம் ‘வாடிவாசல்’. ஆனால் படம் தொடங்கிய பாடாக தெரியவில்லை. தற்போது படத்திற்கான இசை பணிகளை ஜி.வி.பிரகாஷ் தொடங்கியுள்ளதாக நல்ல செய்தி வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News March 20, 2025
அரசு பள்ளிகளில் 78,384 மாணவர்கள் சேர்க்கை

மார்ச் 1 முதல் 19ஆம் தேதி வரை அரசு பள்ளிகளில் இதுவரை 78,384 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் வழியில் 14, 279 மாணவர்களும், ஆங்கில வழியில் 64,105 மாணவர்களும் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.