News December 13, 2024
வீட்டில் கொசுத் தொல்லையா? இதை செய்யுங்க போதும்

1) வேப்பிலை, நொச்சியிலை, மாவிலை, வேப்பம்பூவை உலர்த்தி அதை சாம்பிராணி உடன் சேர்த்து அல்லது நெருப்புத்துண்டுகளுடன் சேர்த்து புகைப்போட்டால் கொசு வராது 2) அகிற்கட்டையை துண்டுகளாக்கி புகைபோட்டால் கொசு வராது. 3) எலுமிச்சை சாறில் கற்பூரம் (அ) கற்பூராதி தைலம் கலந்து வீடு முழுக்க ஸ்ப்ரே செய்யலாம் 4) வேப்பிலையை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரில் வீட்டை சுத்தம் செய்தாலும் வாசனைக்கு கொசு வராது.
Similar News
News September 14, 2025
வெறுப்புகளை விஷமாக அருந்துகிறேன்: PM மோடி

2019-ல் அசாமை சேர்ந்த பாடகர் பூபன் ஹசாரிக்காவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டதை காங்கிரஸ் விமர்சித்திருந்தது. இதற்கு PM மோடி பதிலடி கொடுத்துள்ளார். நான் சிவன் பக்தன் என்பதால், எனக்கு எதிராக வரும் வெறுப்பு பேச்சுகளை விஷம் போல் அருந்துவேன் எனக் குறிப்பிட்ட அவர், வேறு ஒருவரை அப்படி பேசினால் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என எச்சரித்திருந்தார்.
News September 14, 2025
BREAKING: கனமழை கொட்டித் தீர்க்கும்.. அலர்ட்

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 17-ல் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 20-ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், கவனமாக இருங்க நண்பர்களே!
News September 14, 2025
காங் – RJD கூட்டணி முறிகிறதா?

பிஹாரில் காங்.,-RJD இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இதையடுத்து, மாநிலத்தின் 243 தொகுதிகளிலும் RJD தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். இந்நிலையில், தேஜஸ்வி உடன் காங்., மேலிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பிஹாரில் JD(U)- BJP கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.