News February 23, 2025

நீங்க நல்லவரா கெட்டவரா?

image

‘தக் லைஃப்’ படத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் நல்லவரா கெட்டவரா? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் கலகலப்பாக பதிலளித்துள்ளார். தான் திரும்ப மணிரத்னத்தை சந்திக்க வேண்டாமா எனவும், கஷ்டப்பட்டு எடிட்டிங் செய்து கொண்டிருக்கும் போது, எடிட்டே இல்லாமல் கதையை சொல்லிவிட்டீர்களே என கேட்டால் என்ன பதில் சொல்வது எனவும் கமல் கேட்டுள்ளார். நல்லதும், கெட்டதும் சேர்ந்ததுதான் அந்த கேரக்டர் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 23, 2025

வெளிநாடு வேண்டாம்.. புதுமணப் பெண் விபரீத முடிவு

image

காதல் கணவர் வெளிநாடு செல்வது பிடிக்காமல் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட அவலம் அரங்கேறியுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த முத்தரசி, லட்சுமணன் என்பவரை 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார். லட்சுமணனுக்கு குவைத்தில் வேலை கிடைத்துள்ளது. இதற்கு முத்தரசி எதிர்ப்பு தெரிவித்தும் லட்சுமணன் விசா ஏற்பாட்டுக்கு மும்பை சென்றதால், அவர் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்கெல்லாமா தற்கொலை?

News February 23, 2025

₹700 கோடி பட்ஜெட்டில் மகாபாரத படம்: லிங்குசாமி

image

இயக்குநர் லிங்குசாமி அடுத்ததாக ₹700 கோடி பட்ஜெட்டில் புராண திரைப்படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மகாபாரதத்தை வைத்து அபிமன்யு, அர்ஜுனன் என 2 பாக கதையம்சம் கொண்ட படத்தினை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார். இவர் கடைசியாக இயக்கி ‘தி வாரியர்’ படம் ஃபிளாப் ஆனது.

News February 23, 2025

INDக்கு எதிரான போட்டி.. PAKக்கு பெரிய ஷாக்?

image

CTல் இன்று IND vs PAK மோத உள்ள நிலையில், PAKன் ஸ்டார் வீரர் பாபர் அசாம் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்கிறார்கள். கண் எரிச்சல் காரணமாக நேற்றையை பயிற்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால், அணியில் அவர் இடம்பெறுவது சந்தேகம் தான் கூறப்படுகிறது. இது PAK அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. முன்னதாக, ஓபனிங் வீரர் ஃபகர் ஜமான் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியிருந்தார்.

error: Content is protected !!