News April 18, 2025
சமைக்கப் போறீங்களா… இதப் படிங்க முதல்ல!

விதை மற்றும் வெஜிடெபிள் எண்ணெய்களை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் இந்த எண்ணெய்களில் இருக்கும் Linoleic acid என்ற ஒமேகா-6 Fatty acid மார்பகப் புற்றுநோயை 3 மடங்கு வரை அதிகரிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாகவே எண்ணெய் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது தானே!
Similar News
News December 16, 2025
IPL AUCTION: புறக்கணிக்கப்பட்ட வீரர்கள்

அபுதாபியில் நடைபெற்று வரும் ஐபிஎல் மினி ஏலத்தின் முதல் செட்டில், பேட்ஸ்மென்களுக்கான ஏலம் நடந்தது. இதில் 2 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 2 உள்நாட்டு வீரர்கள் என 4 பேரை எந்த அணியும் வாங்க முன் வரவில்லை. ஆஸி., வீரர் ஜேக் பிரேஸர் மெக்குர்க், நியூஸி., வீரர் டெவான் கான்வே மற்றும் உள்நாட்டு வீரர்களான பிரித்வி ஷா, சர்ஃபராஸ் கான் ஆகியோர் விலை போகவில்லை.
News December 16, 2025
EPS-க்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை: TN அரசு

11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாகவும், இதுதொடர்பாக EPS மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க CBI-க்கு உத்தரவிட கோரியும் ராஜசேகர் என்பவர் சென்னை HC-ல் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், EPS-க்கு எதிரான இப்புகாரில் முகாந்திரம் இல்லை, இப்புகார் முடித்து வைக்கப்பட்டதாகவும் TN அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனையடுத்து, இவ்வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
News December 16, 2025
₹25.20 கோடி.. கிரீனை தட்டித் தூக்கிய KKR

IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 3-வது வீரர் என்ற பெருமையை கேமரூன் கிரீன் பெற்றுள்ளார். சென்னையும், கொல்கத்தாவும் அவரை வாங்குவதற்கு மல்லுக்கட்டியதால் அவரது ஏலத்தொகை ₹2 கோடியில் இருந்து ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ₹43.40 கோடி வைத்திருந்த போதிலும், ₹25 கோடிக்கு பிறகு ஏலம் கேட்பதை CSK நிறுத்தியது. இதையடுத்து ₹25.20 கோடிக்கு அவரை KKR ஏலம் எடுத்தது. இதனால் CSK ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.


