News March 15, 2025
சிக்கிமுக்கு சுற்றுலா போறீங்களா? இதை படிங்க

சிக்கிமுக்கு வரும் வெளிமாநில, வெளிநாட்டு பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் ரூ.50ஐ அந்த மாநில அரசு வசூலிக்கத் தொடங்கியுள்ளது. சிக்கிமுக்கு வரும் சிறார் தவிர்த்த சுற்றுலா பயணிகள், 30 நாட்கள் தங்கியிருக்க இந்த கட்டணம் ஹோட்டல்களில் வசூலிக்கப்படுகிறது. பின்னர் அத்தொகை மாநில சுற்றுலாத் துறையிடம் அளிக்கப்படுகிறது. இத்தொகையை கொண்டு சுற்றுலா உட்கட்டமைப்பை மேம்படுத்த சிக்கிம் அரசு திட்டமிட்டுள்ளது.
Similar News
News March 16, 2025
WPL கோப்பையை வென்றது மும்பை

பரபரப்பான இறுதிப்போட்டியில் மும்பை அணி WPL பட்டம் வென்றது. டெல்லி அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 3 ஆண்டு லீக் வரலாற்றில் 2வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது. மும்பை நிர்ணயித்த 150 ரன்கள் இலக்கை விரட்டிய டெல்லி அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நிகி பிரசாத் (25*) போராடியும் பலன் கிடைக்கவில்லை. ஏற்கெனவே, 2023ல் மும்பை கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
News March 16, 2025
கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட கர்நாடக டிஜிபி

துபாயில் இருந்து தங்கம் கடத்தியதாக கைதான நடிகை ரன்யா ராவின் வளர்ப்புத் தந்தையான கர்நாடக டிஜிபி (போலீஸ் வீட்டுவசதி கட்டுமானத் துறை) ராமசந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். தங்கக் கடத்தலுக்கு ராமசந்திர ராவுக்கு இருக்கும் செல்வாக்கை நடிகை ரன்யா ராவ் பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில், ராமசந்திர ராவுக்கு எதிராக விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
News March 16, 2025
அடிபணிய மாட்டோம்: கர்ஜிக்கும் புதிய பிரதமர்

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்ற மார்க் கார்னி, அமெரிக்காவின் பகுதியாக கனடா ஒருபோதும் மாறாது என்று உறுதியாக தெரிவித்துள்ளார். டிரம்ப்புடனான மோதல், வர்த்தக போர்ச் சூழல் என கனடாவின் இக்கட்டான காலகட்டத்தில் பதவியேற்றுள்ள கார்னி, நாட்டின் இறையாண்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார். நிச்சயமற்ற பொருளாதார நிலை, விரைவில் தேர்தல் என்ற சூழலில், கார்னியின் தலைமைக்கு இது ஒரு சவால்.