News September 6, 2025

மீண்டும் அரவக்குறிச்சி? கணக்கு போடும் அண்ணாமலை

image

தமிழக அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. இந்நிலையில், சொந்த தொகுதியிலேயே தோல்வி என்ற இமேஜை மாற்ற, வரும் தேர்தலில் அண்ணாமலை மீண்டும் அரவக்குறிச்சியில் போட்டியிட திட்டமிடுவதாக கூறப்படுகிறது. MLA இளங்கோ மீது தொகுதி மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் வாக்குகள் தங்களுக்கு வரும் என தலைமை நம்புவதாகவும் கமலாலய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

Similar News

News March 22, 2026

கரூர் ஃபார்முலாவில் திமுக? செந்தில் பாலாஜி

image

கரூரில் வாக்காளர்களை அடைத்துவைக்க <<19438297>>மனிதப்பட்டிகளை<<>> திமுக தயார் செய்வதாக அதிமுக Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர் புகாரளித்திருந்தார். இந்நிலையில், ஒவ்வொரு வார்டுக்குமான பூத் கமிட்டி அலுவலகங்கள் தான் அவை என்றும், அதற்குரிய அனுமதியை முறையாக திமுக பெற்றுள்ளதாகவும் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே அதிமுகவினர் ஆளும்கட்சி மீது வைப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

News March 22, 2026

மதுப் பிரியர்கள் அதிர்ச்சி.. தேர்தலால் வந்த மாற்றம்

image

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை தொடர்ந்து, அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் முக்கிய உத்தரவு பறந்துள்ளது. அதன்படி, ஒரு கடையில் திடீரென 30%-க்கு மேல் விற்பனை அதிகரித்தால் அங்கு தீவிரமாக சோதனை நடத்தப்படும் என எச்சரித்துள்ளது. மேலும், 50%-க்கு அதிகமாக மதுபானங்களை இருப்பில் வைக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மதுப் பிரியர்கள் அதிகளவில் மது வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

News March 22, 2026

விஜய்யால் பாதிப்பு கொஞ்சம் தான்: ஐ.பெரியசாமி

image

அரசியல் களத்தில் முதல்முறையாக அடியெடுத்து வைத்துள்ள விஜய்யும் தவெகவினரும் வரும் தேர்தலில் தங்கள் பலம், பலவீனம் பற்றி நன்கு புரிந்துகொள்வார்கள் என ஐ.பெரியசாமி கூறியுள்ளார். இளம் வாக்காளர்களின் கவனத்தை தவெக ஈர்த்துள்ளதாக கூறிய அவர், இதனால் பெரியளவில் தாக்கம் இருக்காது எனவும் பேசியுள்ளார். மேலும், இளம் வாக்காளர்களை மட்டுமே நம்பியிருப்பது தவெகவுக்கு பெரிய ஆதாயத்தை தராது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!