News October 5, 2024
புது மொபைல் வாங்குறீங்களா? இதை செஞ்சுறாதீங்க

ஸ்மார்ட்ஃபோன் வந்ததில் இருந்து செல்போனை அடிக்கடி மாற்றுவது ஃபேஷனாகி விட்டது. அப்படி புது மொபைல் வாங்குவோர் பலரும், அதன் பின்னால் இருக்கும் ஸ்டிக்கரை பிய்த்து விடுவார்கள். ஆனால், செல்போனில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், வாரண்ட்டி claim-க்கு அந்த ஸ்டிக்கரை பல நிறுவனங்கள் கேட்கின்றன. எனவே, அந்த ஸ்டிக்கரை போனில் இருந்து எடுக்க வேண்டாம். எடுத்தால் கூட, போன் பாக்ஸில் அதை ஒட்டி பத்திரப்படுத்துவது நல்லது.
Similar News
News August 13, 2025
புதுவையில் சோலார் விழிப்புணர்வு முகாம்

புதுவை தவளக்குப்பம் சுபமங்கள ஹாலில் நாளை (ஆக.14) காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை சோலார் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. இத்திட்டம் மூலம் வீட்டின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க 1 கிலோ வாட்ஸ்க்கு ரூ.30 ஆயிரமும், 2 கிலோ வாட்ஸ் ரூ.60 ஆயிரமும் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது. மேலும் விபரங்களுக்கு 9489080373, 9489080374 தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
News August 13, 2025
ODI தரவரிசை: மாஸ் காட்டும் இந்தியாவின் டாப் 3!

வெளியிடப்பட்டுள்ள ODI தரவரிசையில், இந்தியாவின் சுப்மன் கில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். கில் 1-ம் இடத்திலும், ரோஹித் 2-ம் இடத்திலும், கோலி 4-ம் இடத்திலும் உள்ளனர். இது ODI ஃபார்மெட்டில் இந்திய பேட்டர்களின் ஆதிக்கத்தை காட்டுகிறது. ODI-யில் இருந்து ரோஹித், கோலி இருவரும் ஓய்வு பெற வேண்டும் என்ற விமர்சனத்திற்கு இது பதிலடியாகவும் அமைந்துள்ளது.
News August 13, 2025
AI-யால் செய்யவே முடியாத வேலைகள்..பட்டியல் இதோ!

AI-யால் வேலை பறிபோகும் அச்சம் மக்களிடையே இருக்கிறது. அந்த வகையில் AI-யால் செய்யவே முடியாத வேலைகளின் பட்டியலை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ளது. செவிலியர், ரத்த மாதிரிகளை எடுப்பது, தீயணைப்பு பணி, எலக்ட்ரிஷியன் பணி, கப்பல் பொறியாளர் போன்ற வேலைகளை AIயால் செய்யமுடியாதாம். சில வேலைகளில் மனிதர்களின் பங்கும் வேண்டும் என்பதால் AI-யால் முற்றிலுமாக அதனை செய்யமுடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.