News February 25, 2025
நீங்கள் அட்வெஞ்சர் பிரியரா? புது பைக் இன்று அறிமுகம்

இந்தியாவில் இன்று DESERTX பைக்கை அறிமுகம் செய்கிறது DUCATI. மிடில் வெயிட் அட்வெஞ்சர் செக்மண்டில் இந்த பைக் அனைவராலும் விரும்பப்படும் என நம்பப்படுகிறது. BMW GS 850, Triumph tiger 800–க்கு போட்டியாக இந்த பைக் களமிறக்கப்படுகிறது. ஆஃப் ரோடை மனதில் வைத்து பைக்கின் பிரேமை DUCATI வடிவமைத்துள்ளது. என்ஜினை பொருத்தவரை 937 சிசி திறன் கொண்டது. இந்தியாவில் இதன் ஆன் ரோடு விலை 20 லட்சமாக இருக்கலாம்.
Similar News
News February 25, 2025
தோனியே கேப்டனாக இருந்தாலும்.. சானா சாடல்

INDக்கு எதிரான போட்டிக்கான PAK அணியை அறிவித்த போதே, அந்த அணி தோல்வி அடைந்துவிட்டதாக PAK மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சானா மிர் விமர்சித்துள்ளார். தோனி போன்ற தலைசிறந்த கேப்டனால் கூட இப்படி ஒரு அணியை வைத்து வெல்ல முடியாது எனவும், 2 பார்ட் டைம் பவுலர்களை வைத்து போட்டியை எதிர்கொண்டதே தவறு எனவும் அவர் சாடியுள்ளார். மேலும், PCB நிர்வாகத்தில் முழுமையான மாற்றம் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News February 25, 2025
Delimitation: திமுக எதிர்ப்பு ஏன்?

மத்திய அரசு திட்டமிடும் தொகுதி மறுவரையறைக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஏனென்றால், மறுவரையறைக்குப் பின் தமிழகத்தின் லோக் சபா தொகுதிகள் 39இல் இருந்து 31ஆக குறையும். அதேநேரம், உத்தர பிரதேசத்தின் தொகுதிகள் 80இல் இருந்து 143ஆக உயரும். இது தென் மாநிலங்களின் அதிகாரத்தை குறைப்பதாக திமுக குற்றம்சாட்டுகிறது. இதுகுறித்த உங்களது கருத்து என்ன?
News February 25, 2025
Delimitation: தொகுதி மறுவரையறை என்றால் என்ன?

லோக் சபாவுக்கான தொகுதிகள் மக்கள் தொகையின் அடிப்படையில் வரையறை செய்யப்படுகின்றன. தற்போது தமிழ்நாட்டில் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஆனால், 1967 வரை அது 41 தொகுதிகளாக இருந்தது. பின்னர், மற்ற மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்ததால், தமிழகத்தில் 39ஆக குறைக்கப்பட்டது. தற்போது, மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதிகளை மறுசீரமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.