News February 25, 2025
நீங்கள் சிகரெட் பிடிப்பவரா?

புகை பிடிப்பதால் கேன்சர் வரும் என சிகரெட் பெட்டிகளில் போட்டிருந்தாலும், நமது மக்கள் அதில் கவனம் செலுத்த மாட்டார்கள். இருப்பினும் புகை பிடிப்பது எலும்புகளையும் பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எளிமையாக உடையும் அளவிற்கு எலும்பின் வலிமையை புகைப்பழக்கம் குறைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், எலும்பு உருவாவதற்கு காரணமான ஹார்மோன்களையும் அது சிதைப்பதாகவும் கூறுகின்றனர்.
Similar News
News March 7, 2026
கோடை காலத்திற்கு ஏற்ற கலர் எது தெரியுமா?

கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. கோடைக்காலத்தில் குறைந்த வெப்பத்தை உறிஞ்சும் நிறங்களில் ஆடைகள் அணிந்தால், கோடை வெயிலில் இருந்து தப்பிக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். வெள்ளை, வெளிர் நீலம், வெளிர் சாம்பல், மென்மையான இளஞ்சிவப்பு, வெளிர் பச்சை, லாவெண்டர், பவுடர் நீலம், கிரீம் போன்ற வண்ணங்களில் ஆடைகளை அணியலாம். கருப்பு நிறம் அதிகளவில் வெயிலை உறிஞ்சும் என்பதால் இதை தவிர்ப்பது நல்லது.
News March 7, 2026
விஜய் இப்படிப்பட்டவரா.. சங்கீதாவால் பரபரப்பு

சங்கீதா விவாகரத்து கோரிய பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் அவர் <<19319427>>புதிய மனுவை<<>> தாக்கல் செய்திருப்பதுதான் இன்றைய ஹாட் டாபிக். அதில், மேலும் பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை சங்கீதா முன்வைத்துள்ளார். விஜய்யின் அரசியல் சூழல் கருதி பலமுறை சுமுகமாக விவாகரத்து பெற முயற்சி செய்ததாக குறிப்பிட்டுள்ள அவர், விஜய் பிரிந்து செல்ல மறுத்து வழக்கறிஞர் மூலம் மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
News March 7, 2026
TN-ஐ காப்பாற்ற இறைவனால் தான் முடியும்: நயினார்

கஞ்சா போதை பழக்கத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டை காப்பாற்ற இறைவனால்தான் முடியும் என்பதால் திருநள்ளாற்றில் சாமி தரிசனம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இன்று சனிப்பெயர்ச்சி நடப்பது போல், தமிழகத்தில் திமுக ஆட்சியும் அகல வேண்டும் என்றும் இந்து மதத்திற்கும், சனாதன தர்மத்திற்கும் எதிரான ஆட்சி இது எனவும் சாடியுள்ளார்.


